மங்களாதேவி கோயில், மங்களூர்

மங்களூரிலிருந்து தென்கிழக்காக 3 கி.மீ தொலைவில் போலாரா என்னும் இட்த்தில் மங்களாதேவி கோயில் அமைந்துள்ளது. பல கோட்டைகளால் சூழப்பட்டுள்ள இந்த மங்களா தேவி கோயில் தான் மங்களூர் என்ற பெயர் வருவதற்கான காரணம்.இந்தக் கோயில் 9ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டை ஆண்ட குண்டவர்மா மன்னரால் கட்டப்பட்டதாகும். மங்களாதேவி தெய்வமே இந்த கோயில் பிரதான தெய்வம்.

நவராத்திரியின் போது இங்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. நவராத்திரி ஒன்பதாம் நாளன்று ரதோற்சவம் எனும் தேரோட்டம் பிரசித்தமாக நடைபெறுகிறது. அப்போது மங்களாதேவி தெய்வம் அலங்காரத் தேரில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.மங்களா தேவி கோயிலுக்கு சென்று வழிபடுவதால் நன்மைகள் நடக்கும் என்ற தெய்வ நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. கணேச உற்சவமும் இங்கு பிரம்மாண்டமாக கோயிலில் கொண்டாடப் படுகிறது.மங்களூரிலிருந்து இந்த கோயிலுக்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் அதிகம் உண்டு.

மணமாகாத கன்னிகளுக்கு இக்கோயில் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அவர்கள் மங்களா பார்வதி விரதம் இருந்தால் விரைவில் அவர்கள் சரியான வாழ்க்கைத் துணை அமைந்து விவாகம் முடிக்கும் பாக்கியம் பெறுவார்கள் என்று ஐதீகம் இந்த கோயிலுக்கு உண்டு.

Please Wait while comments are loading...