மந்திரா சர்ஃபிங் கிளப், மங்களூர்

மங்களூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் முல்கி எனும் இடத்தில் மந்திரா சர்ஃபிங்க் கிளப்அமைந்துள்ளது. இது இந்தியாவிலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட சர்ஃபிங் கிளப் ஆகும். இது சர்ஃபிங் எனும் அலை விளையாட்டை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது.

அமெரிக்கவின் கிழக்குக்கடற்கரை பகுதியில் சர்ஃபிங் விளையாட்டில் முன்னணியாளர்களாக விளங்கிய ஜாக் ஹெப்னர் மற்றும் ரிக் பெரி என்பவர்களால் 2006ல் துவங்கப்பட்ட பெருமையை உடையது இந்த சர்ஃபிங் கிளப்.சர்ஃபிங் அலை விளையாட்டு ஆரோக்கியம் மற்றும் மனச்சுத்திக்கு உகந்த ஒரு பொழுதுபோக்காக கருதப்படுகிறது. இந்த மந்திரா சர்ஃபிங் கிளப் ஒரு ஆன்மீக ஆசிரமாகவும் திகழ்கிறது.

இந்த ஆசிரமத்தால் தான் சர்ஃபிங் விளையாட்டு நடத்தப்படுகிறது. ஆசிரமத்தில் சர்ஃபிங்குடன் தினமும் தியானம் மற்றும் மந்திர ஜபம் போன்றவை நடத்தப்படுகின்றன.

இப்படி ஆன்மீக ரீதியான அம்சங்களை கொண்டிருப்பதால் இந்த மந்திரா சர்ஃபிங்க் கிளப் ஒரு தனித்தன்மையான இடமாகும். நல்ல ஆன்மீக ஆரோக்கியத்தை குறிக்கோளாக இது கொண்டிருக்கிறது.

அருகில் உள்ள கிராம மக்களுடன் சேர்ந்து இந்த மந்திரா சர்ஃபிங்க் கிளப் வருடந்தோறும் விழாக்களையும் கொண்டாடுகிறது. ஆன்மீகச்சொற்பொழிவுகள் மற்றும் ஆன்மீக வகுப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றன.

இந்த கிளப் தொடங்கி 15 வருடங்கள் ஆனாலும் இதுவரை இந்தியாவிலிருந்து 15 சர்ஃபிங் உறுப்பினர்கள் மட்டுமே இதில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த கிளப் புதிய உறுப்பினர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்பதிலும் புதிய வாழ்க்கை முறையினை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் விருப்பத்துடன் ஈடுபடுகிறது.

Please Wait while comments are loading...