தன்னீர்பாவி கடற்கரை, மங்களூர்

மங்களூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் பனம்பூர் எனும் இடத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இது குர்புரா ஆற்றின் அமைதியையும் அலைகளின் சாந்தத்தையும் ஒருசேரக் கொன்டுள்ளது. குர்புரா ஆறு இங்கு கடலில் கலக்கிறது. தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இவ்வழியே செல்கின்றன.

கடற்கரை அதிக கூட்டமின்றி தனிமையாக காணப்படுகிறது. அமைதியையும் தனிமையையும் இயற்கைப்பிரியர்களுக்கு இது மிகவும் ஏற்ற இடமாகும்.ஆற்றுக்கு மறுபுறம் விசேட தொழில் நுட்ப அடிப்படையில் அமைந்த மிதவை மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் உள்ளது. சுல்தான் பேட்டரியிலிருந்து இங்கு படகில் செல்லலாம்.

அரசால் சுற்றுலாத்தலமாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் படகு போக்குவரத்து இன்னும் உயிர் பாதுகாப்பு விஷயங்களில் ஒழுங்குப்படுத்தப் படவில்லை. இதனால் சில விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. ஆகவே சுற்றுலாப்பயணிகள் தம் சொந்த பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் வேண்டும்.

Please Wait while comments are loading...