பழனி - பால் மணக்குது! பழம் மணக்குது!

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரம், இந்தியாவில் உள்ள ஒரு மிக பழமையான மலைப் பிரதேசம் ஆகும். பழனி என்ற வார்த்தை பழம் மற்றும் நீ என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து வருகிறது.

பழனி மலை மேற்கு மண்டலத்தில் அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில் இந்த பழனி மலை பாளையக்காரங்களின் தாயகமாக விளங்கியிருக்கிறது. தற்போது இந்த பழனி மலை உலக மக்களின் பார்வையைஅதிக அளவில் ஈர்த்து வருகிறது. அதற்கு காரணம் பழனி மலையின் உச்சியில் பழனி தண்டாயுதபாணி சுவாமியாக எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளே.

வரலாறு

பழனியைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை பல ஆன்மீக ஏடுகள் குறிப்பிடுகின்றன. மதுரை மற்றும் கோயம்புத்தூர் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக பல காலங்கள் பழனி இருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கு இருக்கும் பெரிய நாயகி அம்மன் ஆலயம், பாண்டிய மற்றும் நாயக்க மன்னர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

18 ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆளுகையில் பழனி இருந்தது. அப்போது பழனியில் இருந்த பாளையக்காரர்கள் முகலாய மன்னர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். பின் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் பழனி மலை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மாறியது.

பழனியைச் சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள்

அடிப்படையில் பல இந்து ஆலயங்களுக்கு ஒரு முக்கியத் தலமாக பழனி விளங்குகிறது. அதில் முக்கியமானது முருகப் பெருமானுக்கு எழுப்பப்பட்டுள்ள தண்டாயுதபாணி ஆலயம் ஆகும்.

இந்த ஆலயத்தை தவிர்த்து இங்கு திருவாவினன்குடி ஆலயம், இடும்பன் ஆலயம், கணபதிக்கான பட விநாயகர் ஆலயம், பார்வதிக்கான பெரிய நாயகி அம்மன் ஆலயம், சிவ பெருமானுக்கான பெரியன் ஆவுடையார் ஆலயம், விஷ்ணுவிற்கான கண்ணடி பெருமாள் ஆலயம் போன்ற பிரபலமான ஆலயங்கள் பழனியில் உள்ளன.

தைப்பூசம், வைகாசி விசாகம் மற்றும் திருகார்த்திகை போன்ற திருவிழாக்கள் பழனியில் மிக விசேஷமாகக் கொண்டாடப்படும். அந்த தருணங்களில் ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் பழனிக்கு வருகை தருவர். பறவைகளை விரும்புவோரின் சொர்க்கமாகவும் பழனி விளங்குகிறது.

ஏனெனில் நைட் ஹெரான்ஸ், இக்ரெட்ஸ், கோல்டன் பேக்ட் உட்பெக்கர்ஸ் போன்ற வெளிநாட்டு புலம்பெயர் பறவைகளை இந்த பகுதியில் சாதாரணமாக பார்க்கலாம். மலை ஏறுபவர்களுக்கும் இந்த பழனி மலை ஒரு ஏற்ற இடமாக இருக்கிறது.

Please Wait while comments are loading...