Search
 • Follow NativePlanet
Share

கோத்தகிரி - கவனிக்கும் மலைகள்!

22

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும் அதன் அழகிய சூழல் மற்ற இடங்களுக்கு சளைத்தது இல்லை. கிருத்துவ மதபோதகரின் மகனாகப் பிறந்த ரால்ப் தாமஸ் ஹாட்ச்கின் கிரிப்பித் என்பவர் இங்கிருந்து தான் வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தொடங்கினார்.

இந்த மலைப் பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 1793 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் மலையேறும் (ட்ரெக்கிங்) அனுபவத்திற்கு ஏற்ற இடம் எனப் புகழ் பெற்றது. இங்கே உள்ள மலையேறும் தடங்கள் நீலகிரியில் மனித நாகரீகத்தின் கால்தடம் படாத பல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள சுற்றுலாத் தலங்கள்

இங்குள்ள புகழ் பெற்ற மலையேறும் தடங்கள்  : கோத்தகிரி - புனித கேத்தரின் அருவி பாதை, கோத்தகிரி - கொடநாடு பாதை, கோத்தகிரி - லாங்க்வுட் ஷோலா பாதை ஆகியன. நீலகிரியின் மலைகள் புல்வெளிகள் இடையே புகுந்து சென்று மலையேறுவோரின் மனதையும் ஆன்மாவையும் வருடிச்செல்லும் பல சிறிய தடங்களும் இங்கு உள்ளன.

ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் , கொடநாடு வியூ பாயின்ட் , கேத்தரின் நீர் வீழ்ச்சி , எல்க் அருவி, ஜான் சுல்லிவன் நினைவிடம், நீலகிரி அருங்காட்சியகம், நேரு பூங்கா, ஸ்நௌடன் சிகரம் ஆகியவை கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள காண வேண்டிய இடங்கள் ஆகும்.

கோத்தர்களின் மலை

கோத்தகிரி மிகப் பழமையான மலைப் பிரதேசமாக இருந்தாலும் இதன் வரலாற்றின் பரப்பு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் முதலே கிடைத்துள்ளது. கோத்தகிரி என்ற பெயர் கோத்தர்களின் மலை என்று பொருள் படுகிறது.

கோத்தர்கள் பல நூற்றாண்டுகளாக கோத்தகிரியில் வாழ்ந்து வரும் கைவினைஞர் பழங்குடியினர் ஆவர்.அவர்கள் வெளி ஆட்களுடன் பழக விருப்பமில்லாதவர்கள். மேலும் அவர்களது எண்ணிக்கை கடந்த பல வருடங்களாக நிலையாக குறைந்து வருகிறது. கடைசியாக கணக்கெடுத்த போது அவர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.

கோத்தகிரியை அடைவது எப்படி:  கோத்தகிரி ரயில் மற்றும் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரிக்கு செல்ல சரியான சமயம்: கோத்தகிரிக்கு பயணம் செல்ல கோடை காலமே சிறந்த பருவமாகும்.

கோத்தகிரி சிறப்பு

கோத்தகிரி வானிலை

கோத்தகிரி
23oC / 73oF
 • Partly cloudy
 • Wind: WNW 1 km/h

சிறந்த காலநிலை கோத்தகிரி

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது கோத்தகிரி

 • சாலை வழியாக
  கோத்தகிரிக்கு ஒருவர் செல்ல விரும்பினால் சாலை வழியாக செல்வதே சிறந்த மார்க்கமாக இருக்கும். சமவெளியில் இருந்து குன்னூருக்கு எந்த வாகனத்திலும் செல்வது எளிது. நீலகிரிக்கு செல்வதற்கான மிகப் பழமையான பாதையான கோத்தகிரி மலைப்பாதை சிறந்த வழியாகும். மேட்டுப்பாளையத்திலிருந்து இந்தச் சாலையைப் பிடித்து அரவேணு வழியாக கோத்தகிரியை அடையலாம். இந்த வழியாக மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரியை அடைய 33 கி.மீ. தூரம் பயணம் செய்தல் போதும். சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டிருப்பது சாலைப் பயணத்தின் மதிப்பைக் கூட்டுகிறது.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  கோத்தகிரிக்கு நேரடியான ரயில் பாதை ஏதும் இல்லை. அருகாமையில் உள்ள ரயில் பாதை மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாக ஊட்டி செல்லும் பாதையாகும். ரயில் வழியாக இங்கு வர உத்தேசித்தால் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் கோயம்புத்தூர் வந்து அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ரயில் ஏறுவதே சிறந்த வழியாகும். அங்கிருந்து நீலகிரி மலை ரயில் வழியாக குன்னூர் செல்ல வேண்டும். குன்னூரை வந்தடைந்த பின் நீங்கள் செய்ய வேண்டியது அருகிலுள்ள கோத்தகிரிக்கு ஒரு பேருந்திலோ அல்லது வாடகை டாக்சியிலோ ஏறி செல்ல வேண்டியது தான்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  கோத்தகிரிக்கு அருகில் உள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் ஆகும். கோயம்புத்தூருக்கு விமானத்தில் வந்து இங்கிருந்து கோத்தகிரி மலைப்பாதை வழியாக கோத்தகிரி செல்லலாம். அல்லது கோயம்புத்தூரிலிருந்து குன்னூர் பயணம் செய்து, அங்கிருந்து கோத்தகிரிக்கு செல்லலாம்.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Aug,Fri
Return On
24 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
23 Aug,Fri
Check Out
24 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
23 Aug,Fri
Return On
24 Aug,Sat
 • Today
  Kotagiri
  23 OC
  73 OF
  UV Index: 5
  Partly cloudy
 • Tomorrow
  Kotagiri
  20 OC
  67 OF
  UV Index: 5
  Light rain shower
 • Day After
  Kotagiri
  18 OC
  65 OF
  UV Index: 5
  Moderate or heavy rain shower