ஸ்நௌடன் சிகரம், கோத்தகிரி

ஸ்நௌடன் சிகரம், இங்கிருந்து கிடைக்கும் மைசூரின் மனம் மயக்கும் காட்சிக்காக புகழ் பெற்றது. நீலகிரியிலிருந்து மைசூரின் அழகிய காட்சி காணக் கிடைக்கும் இடம் இது ஒன்று தான்.

கோத்தகிரியின் பிரதான சாலையில் அமைந்துள்ள இது கடல் மட்டத்திலிருந்து 2677 மீட்டர் உயரத்தில் உள்ளது. இவ்வளவு உயரத்தில் இருந்தாலும் இங்கு செல்வதற்கான சாலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருப்பதால் இவ்விடத்தை அடைவது எளிது. நீலகிரியிலேயே உயரமான சிகரமான தொட்டபெட்டாவுக்கு அடுத்தபடியாக ஸ்நௌடன் சிகரம் ஒன்று தான் இவ்வளவு உயரம் கொண்டது.

இங்கிருந்து கிடைக்கும் மைசூரின் அழகிய காட்சி தான் இவ்விடத்தை இங்குள்ள மற்ற சிகரங்களில் இருந்து வேறுபடுத்துகிறது. பெயருக்கேற்றார் போல் இந்த சிகரத்தின் உச்சியில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். ஆகையால் இங்கு செல்பவர்கள் ஜாக்கிரதையாக வெப்பமூட்டும் உடைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

Please Wait while comments are loading...