ஓசூர் - ரோஜாக்களின் நகரம்!

கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஓசூர் நகரம். இந்த ஓசூர் நகரம் பரபரப்புகளுக்கு பெயர்போன தொழிற்சாலை நகரமாக இருந்தாலும், ஆண்டு முழுவதும் இனிமையான வானிலையை பெற்றிருக்கிறது. இதன் அருமையான வானிலையின் காரணமாக இது குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்படுகின்றது. மேலும் மோட்டார் வாகன தொழிற்சாலைகளின் முக்கிய மையமாக திகழ்ந்து வரும் ஓசூர் நகரத்துக்கு கன்னட மொழியில் ’புதிய வசிப்பிடம்’ என்று பொருள்.

இப்போது நவீன தொழிற்சாலை நகரமாக அறியப்படும் ஓசூர், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில், ஆங்கிலேய சாம்ராஜ்யத்துக்கும், திப்பு சுல்தானின் மைசூருக்கும் எல்லையாக இருந்து வந்தது.

இந்த நகரம் கி.பி. 1290 ஆம் ஆண்டு ஹோய்சாள சாம்ராஜ்யத்தை சார்ந்த மன்னர் ராமநாதாவினால் நிறுவப்பட்டது. அதன் பின்னர் 1768 மற்றும் 1791 ஆம் ஆண்டுகளில் இருமுறை பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி இந்நகரை கைப்பற்றியது.

அந்த காலங்களில் ஓசூர் நகரின் புகழுக்கு காரணமாக விளங்கி வந்த ப்ரெட்ஸ் கோட்டை, பிரசித்திபெற்ற ஸ்காட்லந்தின் கெனில்வொர்த் கோட்டையின் பிம்பம் போல மிடுக்குடன் தோற்றமளித்து வந்தது. ஆனால் இப்போது அது முற்றிலும் பாழடைந்து காணப்படுகிறது.

மேலும் ஆங்கிலேய ஆட்சியின் போது அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சியர் வால்டன் இலியாட் லாகார்ட், ஓசூர் நகரத்தை சேலத்தின் தலைமையகமாக அறிவித்தார்.

தொழில்நகரமாக மாத்திரம் இல்லாமல், இப்போது உலகின் முன்னணி ரோஜா ஏற்றுமதி நகரமாகவும் ஓசூர் மாறி வருகின்றது. சிங்கப்பூர், ஜப்பான், சவுதி அரேபியா, ஐரோப்பா மற்றும் பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 80 லட்சம் ரோஜா தண்டுகள் இங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றன.

இது அந்நிய செலவானி வணிகத்தில் ஏறத்தாழ 150 கோடி ரூபாய் மதிப்பு உடையது, அதாவது நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டு வருமானத்தில் இது 30 % என்பது வியக்கத்தக்கது.

மதகொண்டபள்ளியில் உள்ள டான்ஃலோரா இன்ஃப்ராஸ்டரக்சர் பார்க் ஐரோப்பாவிற்கு உயர்தர ரோஜா தண்டுகளை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கின்றது. ”தாஜ் மஹால்” என்கிற காப்பீடு பெற்ற ரோஜா வகையே அதிகம் ஏற்றுமதி தேவை உடையதாக இருக்கிறது.

ஸ்டேட் இன்டஸ்ட்ரீஸ் ப்ரொமோஷன் காப்பரரேஷன் ஆஃப் இந்தியா லிட் (SIPCOT) எடுத்த முயற்சியின் விளைவாக ஓசூரில் தொழிற்சாலை வளர்ச்சி தொடங்கியது. சிறிய மற்றும் பின் தங்கிய கிராமங்களின் வளர்ச்சிக்காக பணிசெய்த SIPCOT ஓசூருக்கு ஒரு வரம்.

இதன் மூலமாக அசோக் லீலேண்ட் லிமிடெட், ஏபிஎல், அபொல்லோ டியூப்ஸ் லிட், ஆசியா டொபேக்கோ பி.லிட் (ஐ.டி.சி), ஆவ்டெச் லிமிடெட், பேஸ் கார்ப்பரரேஷன் லிட், பாடா இந்தியா லிட், கார்பொரண்டம் யூனிவர்சல் லிமிடெட், எக்சைடு இண்டஸ்ட்ரீஸ் லிட், ஃபெய்வ்லீ ட்ரேன்ஸ்போர்ட் இந்தியா லிட், கேட்டர்பில்லர் இந்தியா பி.லிட், ஜீஆர்பி டெய்ரி ஃபூட்ஸ் பி.லிட், கமாஸ் வெக்ட்ரா, இந்ஹுஸ்தான் மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், INEL-இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ் லிட், மோட்டார்ஸ் லிட், லுக் இந்தியா பி.லிட், ப்ரீமியர் மில்ஸ், டனேஜா ஏரோஸ்பேஸ் அன்ட் ஏவியேஷன் லிமிடெட், டைட்டன் இன்டஸ்ட்ரீஸ், டிடிகே ப்ரிஸ்டீஜ் லிமிடெட் மற்றும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி போன்ற பல்வேறு தொழிற்சாலை நிறுவனங்கள் விரும்பும் இடமாக ஓசூர் மாறியுள்ளது.

இதன் வளமையான வரலாற்று பின்னணியும், அருமையான வானிலையும், பொன்னையாருக்கு அருகே இருக்கும் இட அமைப்பும் வணிகர்களையும், வணிகத்தையும் மாத்திரம் அல்ல, எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளையும் வார இறுதி பயணங்களுக்காக ஈர்த்து வருகிறது.

கெலவரப்பள்ளி அணையின் அழகிய காட்சி அமைப்பு, சென்னத்தூர் கிராமத்தின் விருந்தோம்பல், ராஜாஜி நினைவு கட்டிடம் போன்ற நினைவுச்சின்னங்கள், சந்திர சௌடீஸ்வரர் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் ஓசூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.

கெலவரப்பள்ளி அணைக்கு நண்பர்களோடும் குடும்பத்தோடும் செல்லக்கூடிய சிறிய சுற்றுலா முதல் பக்தியுள்ள ஆன்மாக்கள் செல்லக்கூடிய சந்திர சௌடேஷ்வரி கோவில் மற்றும் உங்களை வரலாற்றில் பின் நோக்கி பிரயாணம் செய்ய வைக்கும் ராஜாஜி நினைவு மண்டபம் போன்ற பல அம்சங்கள் ஓசூரில் உள்ளன.

அருள் மிகு மரகதாம்பாள் சமேதாவுக்கும், ஸ்ரீ சந்திரசௌடீஷ்வரருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட மலைக்கோவில் ஓசூரில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடம் ஆகும். தக்‌ஷ்னா திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கடேஷ்வர ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் ஒரு மலைக்கோவிலும் ஓசூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.

உங்களுக்கு நேரம் இருந்தால் ஓசூரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒக்கேனக்கல் அருவியை நீங்கள் பார்வையிட வேண்டும். நீங்கள் இயற்கை விரும்பியாக இருந்தால் கிருஷ்ணகிரிக்கு செல்லும் பாதையில் காட்டு விலங்குகள் நடைபயிலும் ஒரு இடத்திற்கு நீங்கள் பயணம் செல்லலாம். த

மிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் கிருஷ்ணகிரி அணையும் அங்கே இருக்கிறது, அது ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமும் ஆகும்.

அது மட்டுமல்ல, மதிக்கேரி (310 கி.மீ. தொலைவு ), வயநாடு (290 கி.மீ தொலைவு ), கூர்க் (280 கி.மீ தொலைவு), ஊட்டி (296 கி.மீ. தொலைவு ) மற்றும் கோடைக்கானல் (405 கி.மீ, தொலைவு) போன்ற மலைகள், புட்டபர்த்தி (190 கி.மீ. தொலைவு) மற்றும் திருப்பதி (240 கி.மீ. தொலைவு) போன்ற வழிபாட்டுத் தலங்கள், மகாபலிபுரம் (305 கி.மீ. தொலைவு) மற்றும் புதுச்சேரி (270 கி.மீ. தொலைவு) போன்ற கடற்கரைகள் ஆகிய இடங்களும் ஓசூரை சுற்றி இருக்கின்றன.

Please Wait while comments are loading...