முதுமலை - இயற்கை வளங்களின் சங்கமம்!

தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. தென்னிந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமை இதற்கு உண்டு, இது தேசம் முழுவதிலும், சர்வதேச அளவிலும் புகழ்வாய்ந்தது.

நாட்டின் வன உயிரினங்களையும், தாவரங்களையும் காப்பதற்கு ஏற்ற ரசனையும், முயற்சிகளையும் உடைய இடமாக முதுமலை காட்சி அளிக்கின்றது. இந்த பகுதியில் சரணாலயமே மிகவும் பிரபலமான ஈர்க்கும் இடம் ஆகும். அரிய வகை தாவரங்களும், விலங்குகளும் இங்கே காணப்படுகின்றன.

முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினால் ஒழுங்குசெய்யப்பட்ட சவாரிகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த சரணாலயத்தில் காணப்படும் வித்தியாசமான காடுகளும், உயிரினங்களும் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிடும்.

வெப்ப மண்டலத்தில் மிகவும் அடர்த்தியான காடுகள், வெப்ப மண்டலத்திற்கு தெற்கே உள்ள முள்காடுகள், வெப்பமண்டல உலர்ந்த அடர்த்தியான காடுகள் ஆகியவற்றை இங்கே காணலாம். பறவை விரும்பிகளுக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட பறவை இணங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.

மானிடர் லிசார்டுகள், கழுதைப்புலிகள், நரிகள், மான்கள், சிறுத்தைப்புலி மற்றும் மறியமான் ஆகிய விலங்குகள் இந்த பசுமை நிறைந்த அமைதியான சூழலில் சமாதானத்தோடு வாழ்ந்து வருகின்றன.

அதிகமான புலிகள் வாழ்கின்ற புலிகள் பாதுகாப்பு மையமும் முதுமலை சரணாலயத்தில் இருக்கின்றது. மேலும், எழுநூறுக்கும் மேற்பட்ட யாணைகள் இந்த சரணாலயத்தில் அலைந்து திரிகின்றன.

அதிக எண்ணிக்கையிலான அரிய உயிரினங்கள் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள்) முதுமலையை தங்கள் இல்லமாக கொண்டு இருக்கின்றன. எனவே நாட்டில் வேறுபட்ட உயிரினங்களை பாதுகாப்பதில் முதுமலை முக்கிய பங்கு வகிக்கின்றது.

காட்டு நெல், மஞ்சள், காட்டு இஞ்சி, இலவங்க பட்டை, மாங்காய், கொய்யா, மிளகு ஆகியவை இந்த சரணாலயத்தில் வளர்கின்றன, இவை பண்படுத்தப்பட்ட தாவரங்கள் வளர்ப்பதற்கு ஆதாரமாக இருப்பதை உறுதிசெய்கின்றன.

பரவிக்கிடக்கும் தாவரபட்சினிகளுக்கு இந்த தாவரங்கள் வாழ்வளித்து வருகின்றன. இங்கே வளரும் இரண்டு வகையான மூங்கில்கள்  (பம்பூசா மற்றும் டெண்ட்ரொகேலாமஸ் ஸ்டிரிக்டஸ்) யானைகள் போன்ற பெரிய விலங்குகளுக்கு உணவாக அமைகின்றன.

முதுமலையிலும் அதை சுற்றிலும்

முதுமலையில் நூற்றுக்கணக்கான ஈர்க்கும் இடங்கள் இருக்கின்றன,  பைக்காரா ஏரி, காலாட்டி அருவி, தெப்பக்காடு யாணை முகாம், மொய்யாறு நதி மற்றும் வன விலங்குகளை பார்க்கவும், அவற்றோடு பழகவும் வாய்ப்பை ஏற்படுத்துகின்ற எண்ணற்ற இடங்கள் ஆகியன அவற்றுள் சில.

ஆண்டு முழுவதும் இனிமையான வானிலையே நிலவுகின்றது. சாலை வழியாக முதுமலை நன்கு இணைக்கப்பட்டு இருக்கிறது, எல்லா கால பாகுபாடின்றி அதிக வாகனப்போக்குவரத்தும் இருக்கின்றது. 

எழில்மிகும் காட்சிகளும், பார்வையிடும் இடங்களும், கடினநடைபயில கிடைக்கும் வாய்ப்புகளும், முதுமலையை குடும்ப சுற்றுலாவுக்கும், சாகச பயணத்திற்கும், ஒரு நாள் உல்லாச பயணத்திற்கும் சிறந்த இடமாக மாற்றுகின்றது.

Please Wait while comments are loading...