Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முதுமலை » வானிலை

முதுமலை வானிலை

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நிகழ்கின்ற வானிலை, கடின நடைக்கு ஏற்ற தன்மை மற்றும் பார்வையிட சிறந்த சூழல் முதலியவற்றை கருத்தில் கொண்டு இதுவே சிறந்த காலம் எனலாம். ஜூன் மாதத்தில் பார்வையிடுவது சிறந்த யோசனையாக இருக்கும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நிலவும் பலத்த மழை கடினப்பயணத்திற்கு இடையூறாக இருக்கும், இந்த காலத்தில் முதுமலை தேசிய பூங்காவும் மூடப்பட்டு இருக்கக்கூடும்.

கோடைகாலம்

முதுமலையில் கோடைக்காலம் கதகதப்பாக இருக்கிறது. அடர்த்தியான காடுகள் இலைகள் இல்லாமலும், விலங்குகள் நீர் குழிகளுக்கு அருகேவும் காணப்படுகின்றன. கோடைக்காலத்தில் சிறிய காட்டுத்தீயையும் பார்க்க நேரிடும். இந்த காலத்தில் பயணம் செய்தால் மெல்லிய ஆடைகள், ட்ரவுசர்கள், நடக்கும் காலணிகள், மற்றும் வெயில் திரைகள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் தட்பவெப்பம் பொதுவாக 16 டிகிரி செல்சியஸில் இருந்து 28 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். முதுமலையில் நிலையான மழைப்பொழிவு இருப்பது இல்லை. சுருக்கமான மழையும், பலத்த காற்றும் எதிர்பாக்கக்கூடிய அம்சங்கள். குடை, ஜெர்கின், ஜீன்ஸ் மற்றும் டி-சட்டைகளை எடுத்துச்செல்லுதல் பரிந்துரைக்கப்படுகின்றது.

குளிர்காலம்

தெளிவான வானம், இனிமையான குளிர்ந்த இரவுகள், வெளிச்சம் நிறந்த பகல் நேரங்கள் ஆகியவற்றை இந்த காலத்தில் எதிர்பார்க்கலாம். இந்த காலத்தில் காலை நேரங்கள் பனிநிறைந்ததாக இருக்கின்றன. மாலை நேரங்கள் குளிர்ச்சியானதாக இருக்கும், எனவே கம்பளி ஆடைகளும், சாதாரண உடைகளும் எடுத்துச் செல்வது நல்லது.