பீளமேட்டில் இருக்கும் கோயம்புத்தூர் சர்வதேச விமானநிலையமே முதுமலைக்கு நெருக்கமான விமான நிலையம் ஆகும். இது முதுமலையில் இருந்து 130 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கின்றது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து இவ்விடத்திற்கு விமானங்கள் கிடைக்கப்பெறுகின்றன. கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதுமலைக்கு டேக்சியில் செல்வதற்கு ஏறத்தாழ ரூ.3,500 கட்டணம் வசூலிக்கப்படும்.