எல்க் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் இருந்து 7 கி.மீ.தொலைவில் உள்ளது. எல்க் என்ற அறிய வகை மானின் பெயரில் விளங்கினாலும் அதற்கும் இந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனவே எல்க் என்ற அறிய வகை விலங்கினத்தைக் காணும் ஆவலுடன் இங்கு செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் அங்கு காணக்கிடைக்கும் காட்சியோ உங்களை வசியப்படுத்தும் வகையில் இருக்கும்.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மேற்கத்திய பாணியில் அமைந்த குடியிருப்பு இங்கு வருபவர்களை வரவேற்கிறது. இங்கு வருவதற்கு சிறந்த பருவம் மழைக்காலம் ஆகும்.
ஏனெனில் அப்போதுதான் இங்குள்ள கூக்கல் பள்ளத்தாக்கு அங்கு பூத்துக்குலுங்கும் ஆரஞ்சு நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அது நிச்சயமாக கண்டு ரசிக்க வேண்டிய காட்சியாகும் .
எல்க் நீர் வீழ்ச்சி "உயிலத்தி" எனும் கிராமத்தின் அருகில் உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியே கண்ணுக்கு இனிய காட்சியாகும். மலைகளின் அமைதியான கம்பீரமும் , நீர்வீழ்ச்சியின் வல்லமையும் இணைந்து இவ்விடத்தை ஒரு கனவுலக காட்சியாகுகிறது.