ஜான் சுல்லிவன் நினைவிடம், கோத்தகிரி

ஜான் சுல்லிவன் நினைவிடம் கண்ணேரிமுக்கு என்ற இடத்தில உள்ளது. கோத்தகிரி நகரின் மையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது. ஜான் சுல்லிவன் உதகையில் முதன் முதலில் குடியமர்ந்த ஆங்கில ஆட்சி அலுவலர் ஆவார்.

நீலகிரிக்கு  இப்போது இருக்கும் புகழுக்கு இவரே காரணம். இவரது காலத்தில் இங்குள்ள பூர்வீகர்களின் பிரச்சினைகளுக்காக போராடி அவர்களின் மதிப்பைப் பெற்றவராக அறியப்படுகிறார்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பயிரிடப்படுவது பெருமளவில்  நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இவரும் ஒரு காரணம் ஆவார். கி.பி 1788ல் பிறந்த இவர், கி.பி. 1855ல் இறந்தார்.

ஜான் சுல்லிவன் நினைவிடம் ஒரு காலத்தில் அவர் குடியிருந்த இடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. பெத்தக்கல் பங்களா என்று அறியப்படும் இங்கு நீலகிரி ஆவண மையம் மற்றும் நீலகிரி அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன.

இந்த நினைவிடம் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை திறந்திருக்கும். நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு பத்து ரூபாய்  மற்றும் சிறியவர்களுக்கு ஐந்து ரூபாய் .

Please Wait while comments are loading...