நீலகிரி அருங்காட்சியகம், கோத்தகிரி

நீலகிரி அருங்காட்சியகம் ஜான் சுல்லிவன் நினைவகம் மற்றும் நீலகிரி ஆவண மையம் அமைந்துள்ள பெத்தக்கல் பங்களாவிலேயே உள்ளது. இது நாட்டின் முதல் மலை வாசஸ்தலமான உதகமண்டலம் அமைந்த நாள் முதல் இன்று வரையிலான நீலகிரியின் வரலாற்றைப் பற்றிய தெளிவான பார்வையை தருவதோடு அந்தக் காலங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

இந்த இடம் பல நூற்றாண்டுகளாக நீலகிரி மாவட்டம் அனுபவப்பட்ட அனைத்து பெரிய கலாச்சார மற்றும் பொருளாதார மாற்றங்களை பதிவு செய்துள்ளது. இந்த வேலையை நல்ல முறையில் செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள் இந்த மலை வாசஸ்தலத்தின் கடந்த காலத்தைப் பற்றி அறியவும் நீலகிரி மாவட்டத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும் இங்கு வருகை தருகிறார்கள்.

Please Wait while comments are loading...