கொடநாடு வியூ பாயின்ட், கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து பதினெட்டு கி.மீ. தொலைவில் உள்ள கொடநாடு வியூ பாயின்ட் , அதன் அமைவிடத்தின் காரணத்தால் டெர்மினஸ் நகரம் என்று அழைக்கப்படுகிறது.

கோத்தகிரி மழைப் பிரதேசத்தின் பல இடங்களுக்கு நாம் செல்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மலைகளின் அமைதியை ரசிப்பதாகவோ, இங்குள்ள அரிய வகை மிருகங்களை அருகில் சென்று காண்பதாகவோ, இங்குள்ள மலர்களின் நறுமணத்தை நுகர்ந்து மன அமைதி பெறுவதாகவோ இருக்கலாம்.

ஆனால் கொடநாடு வியூ பாயிண்டிற்கு வருவதற்கு ஒரே காரணம் அங்கு காணக் கிடைக்கும் கோத்தகிரியின் முழுமையான காட்சியமைப்பேயாகும். இங்கிருந்து கோத்தகிரி மலைப்பிரதேசத்தில் நம்மால் காண முடியாத இடங்கள் மிகச் சிலவே உள்ளன.

கொடநாட்டில் இருந்து காணக் கிடைக்கும் சில  காட்சிகள் : ரங்கசாமி சிகரம், தமிழ்நாடு - கர்நாடாக எல்லையின் சில பகுதிகள், மோயார் ஆறு , பவானிசாகர் அணை இவை எல்லாவற்றுக்கும் மேலாக பசுமை நிறைந்த தேயிலைத் தோட்டங்கள் ஆகியன.

Please Wait while comments are loading...