திங்களூர் - சந்திர பகவானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஊர்!

திங்களூர் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். தஞ்சையில் இருந்து 18கிமீ தொலைவில் அமைந்திருக்கும் திங்களூர், சென்னை, கோவை, மதுரை, கும்பகோணம் ஆகிய நகரங்களில் இருந்து சுலபமாக அடையக் கூடிய வகையில் தரைவழி போக்குவரத்தைக் கொண்டிருக்கிறது.

திங்களூரில் அமைந்திருக்கும் கைலாசநாதர் கோவில் இந்தியா முழுதும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சந்திர பகவானை வழிபட பிரத்யேகமாக இங்கே ஒரு வழிபாட்டுத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

தக்க்ஷ பிரஜாபதியின் சாபத்தில் இருந்து சந்திர பகவானை காப்பாற்றி திங்களூரிலேயே தங்குமாறு பணித்து, ஜாதகத்தில் சந்திரனின் இடமாற்றத்தால் துன்பப்படும் மக்களுக்கு அருள்பாலிக்குமாறு சந்திரனை சிவன் பணித்தார் என நம்பப்படுகிறது. தங்கள் ஜாதகக் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இன்றளவும் ஏராளமான மக்கள் திங்களூரில் வீற்றிருக்கும் சந்திர பகவானை தரிசிக்கின்றனர்.

இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நவக்கிரக ஸ்தலங்களில் திங்களூர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. திங்களூர் கைலாசநாதர் கோவில் காவிரி ஆற்றின் கழுமுகப் பகுதியில் அமைந்திருக்கிறது.

திங்களூரில் விமானநிலையமோ, ரயில்நிலையமோ இல்லாத காரணத்தால் சாலை போக்குவரத்தே இவ்வூரை அடையச் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. திங்களூரை அடையவும் திங்களூரில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்லவும் தமிழக அரசு ஏராளமான பேருந்து வசதிகளைச் செய்திருக்கிறது.

சீரான இடைவெளியில் திங்களூரின் பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகிறது. இருப்பினும் கடைசி நேர கூட்டநெரிசலைத் தவிர்க்க முன்பதிவு செய்தல் அவசியம். குளிர்கால மாதங்களான டிசெம்பர், ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்களில் திங்களூருக்குப் பயணப்படுவது சிறப்பான அனுபவத்தைத் தரும்.

Please Wait while comments are loading...