Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திங்களூர் » வானிலை

திங்களூர் வானிலை

மிதமான தட்பவெட்ப நிலை நிலவும் பிப்ரவரி மாதமே திங்களூருக்குப் பயணப்பட சிறப்பான காலமாகும். பொதுவாகவே சுற்றுலாப்பயணிகள் அம்மாதத்தில் நிறைந்து காணப்படுவார்கள். குளிர்கால சூரியனின் மிதமான சூட்டையும், மாலைநேர இதமான குளிரையும் தவறவிட யாருக்குதான் மனது வரும்? 

கோடைகாலம்

திங்களூரின் புவியியல் அமைப்பின்படி ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் வெயில் நிலவும். மார்ச் மாத இறுதியிலேயே வெயிலின் உக்கிரம் ஆரம்பமாகிவிடும். மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி வரை வெயில் உக்கிரமடையும்.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கும் மழைக்காலம் ஜூலை மாதத்தில் தொடர்ந்து ஆகஸ்ட், செப்டம்பர் வரை நீடிக்கிறது. மிதமான மழையளவில் இருந்து அதிமான மழையளவு வரை இங்கே மாறுபடுகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சூறாவளிக்காற்றுடன் கூடிய மழையும் அவ்வப்போது பெய்யும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் லேசான மழை அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.

குளிர்காலம்

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்கள் குளிர்கால மாதங்களாகக் கருதப்படுகின்றன. குளிர்காலம் என அழைக்கப்பட்டாலும் வட இந்தியப் பகுதிகளில் காணப்படும் அளவிற்கு இங்கே குளிர் நிலவுவதில்லை. ஆனாலும் கூட மிதமான தட்பவெட்ப நிலை நிலவுவதால் திங்களூரின் மிகச்சிறந்த பருவகாலமாக குளிர்காலமே கருதப்படுகிறது. மாலை மற்றும் இரவு வேலைகளில் கம்பளித் துணிகளால் சமாளிக்கக்கூடிய அளவிற்கு குளிர் வீசுகிறது.