திருநள்ளாறு - சனி பகவானின் திருத்தலம்!

திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு.

திரு+ நள + ஆறு என்பது திருநள்ளாறு என்று ஆனது. இதில் 'நள' எனும் சொல் நளச் சக்ரவர்த்தியை குறிக்கிறது. அவர் இக்கோவிலில் வந்து வழிபட்டு, சனி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக நளச் சக்ரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால் திருநள்ளாறு என பெயர் பெற்றது. பாண்டிச்சேரியில், காரைக்கால் அருகே அமைந்துள்ள திருநள்ளாறு, நவகிரஹ ஸ்தலங்களில் ஒன்று.

சனீஸ்வர பகவானின் சக்தி வாய்ந்த திருவுருவச் சிலையைக் கொண்ட இக்கோயில்,ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் கோயிலின் ஒரு அங்கமாகும். ஸ்ரீ தர்பாண்யேசுவரர் கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார்.

காரைக்காலில் இருந்து சாலை வழியாக எளிதில் திருநள்ளாறை அடைய முடியும். திருச்சி, திருவாரூர் வழியாகவும் காரைக்கால் வந்து, பிறகு திருநள்ளாறை அடையலாம்.

மூன்று வருடத்திற்கு ஒரு முறை தன் இருப்பிடத்தை (ராசி) மாற்றி கொள்பவர் சனி பகவான். சனி பகவான் வீற்றிருக்கும் இடத்தைப் பொறுத்து தான் பல்வேறு ராசிக்காரர்களின் இன்ப துன்ப நிலைகள் கணிக்கப்படுகிறது.

அப்படி சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவதை சனிப்பெயர்ச்சி என்று கூறுவர். அந்தப் புண்ணிய தினத்தில், பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருநள்ளாறு வந்து பக்தியோடு வழிபட்டுச் செல்கின்றனர்.

பச்சைப் படிகம் எனும் கீர்த்தனை திருநள்ளாறில் இயற்றப்பட்டதால், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவ்வூருக்கு முக்கிய பங்கு உண்டு. மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படும் அமைதியான, அழகான ஊர் திருநள்ளாறு. அங்கு சென்று வழிபடும் அனைவருக்கும், நல்ல பலன்களை அள்ளித் தருவார் சனி பகவான். 

திருநள்ளாற்றின் வரலாறு

திருநள்ளாற்றிற்கு மிக சுவாரஸ்யமான வரலாறு உண்டு. பச்சைப் படிகம் என்ற கீர்த்தனைகள் மூலம் திருநள்ளாறு குறித்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. சைவ சமய பாரம்பரியம் கொண்ட இவ்வூர் மக்கள், ஜெயினர்களின் வருகையால் அவர்களின் சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டனர்.

அந்த நகரத்தை ஆண்ட ராஜாவோ இத்தகைய மாற்றத்தை விரும்பவில்லை. மாறாக, அந்த நகரத்தின் பாரம்பரிய சமயமான, சைவ சமயத்தை நிறுவ விருப்பம் கொண்டிருந்தார்.

அப்போது, சைவத் துறவியான திருஞான சம்பந்தரின் சிறப்புக்களைப் பற்றி கேள்விப்பட்ட அரசர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் அரசரின் அழைப்பை ஏற்று இங்கு வந்த திருஞான சம்பந்தர், அரசருக்கு நீண்ட காலமாக இருந்த உடல் கஷ்டங்களை தன் விசேஷ சக்திகளை கொண்டு குணமாக்கினார்.

இது அந்நகரம் முழுக்க பரவ ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் திருஞான சம்பந்தர், மக்களின் துன்பங்களையும் நீக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திருஞான சம்பந்தரின் புகழ் நகரம் முழுவதும் பரவியது.

திருஞான சம்பந்தரின்பால் ஈர்க்கப்பட்டு, மக்கள் சைவ சமயத்தைத் தழுவ ஆரம்பித்தனர். இதனைக் கண்ட ஜெயின் சமயத்தினர், சம்பந்தரை போட்டிக்கு அழைத்தனர். அதில் வெற்றி பெற்ற சம்பந்தர், அங்கு மறுபடியும் சைவ சாம்ராஜ்யத்தை நிறுவ பெரும் பணியாற்றினார்.  இதன் தொடர்ச்சியாக, எழுந்தது தான் திருநள்ளாறு கோவில்.

திருநள்ளாறைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சனீஸ்வரர் கோவில், ஸ்ரீ  தர்பாரன்யேசுவரர் கோவில் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் ஆகிய மூன்று கோவில்களும் திருநள்ளாறின் சிறப்புக்களாகும். தர்பணீஸ்வரர் கோவிலின் அங்கமாக விளங்கும் சனீஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

சனீஸ்வர பகவான், இன்பம் துன்பம் என கலந்து கொடுத்து நம் வாழ்க்கை நெறிகளைப் புரிய வைப்பவர். ஆதலால், சனி பகவானின் கருணைப் பார்வை நம் மீது விழ வேண்டும், நம் வாழ்க்கை சுபிக்ஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணி இக்கோவிலுக்கு வந்து பலரும் வழிபடுகின்றனர்.

தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற, சக்தி வாய்ந்த கோவிலான திருநள்ளாறு வந்து வழிபட்டால் அனைத்து துன்பங்களும் தீரும் என்பது நம்பிக்கை.  

கோவிலில் உள்ள சனீஸ்வர பகவானை வழிபடுவதற்கு முன்னர் அங்கு உள்ள நள தீர்த்தத்தில் நீராடுவர். இது காலா காலமாக வழக்கில் இருந்து வருகிறது. தாமதமாக தந்தாலும், சனி பகவான், நிச்சயமாக நல்ல பலன்களை நம் வாழ்வில் தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

ஸ்ரீ  தர்பாரன்யேசுவரர் கோவிலின் மூலவர் சிவபெருமான். அங்கு, சுயம்பு லிங்கமாக திகழும் ஈஸ்வரனை பக்தி பொங்க வணங்குகின்றனர். பிரம்ம தேவனுக்கு, சிவபெருமான் அருள் பாவித்த இடம் திருநள்ளாறு என்று கூறுவர்.

இக்கோயிலில் தர்ப்பை புல் வகையை புனிதமாகக் கருதி இறைவனுக்கு அளித்து மகிழ்கின்றனர். மேலும் திருநள்ளாறில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். விசேஷ நாட்களில், மக்களின் பார்வைக்காக தேரோட்டமும் இங்கு நடைபெறுகிறது. 

அருகில் இருக்கும் மற்ற நவகிரக ஸ்தலங்கள்

சனி கிரகத் தளமான திருநள்ளாறைத் தவிர்த்து, மேலும் எட்டு ஸ்தலங்களும் இவ்வூரில் இருந்து சிறு தொலைவிலேயே அமைந்துள்ளன. அவை பின்வருமாறு, 

சூரிய கிரகத் தளம் :சூரியனார் கோயில்சுக்கிர கிரகத் தளம் : கஞ்சனூர்குரு பகவான் : ஆலங்குடிபுதன் கிரகத் தளம் : திருவெண்காடுசெவ்வாய் கிரகத் தளம் : வைத்தீஸ்வரன் கோவில்ராகு, கேது கிரகத் தளம் : திருநாகேஸ்வரம் மற்றும் கீழ்ப்பெரும்பள்ளம்திங்கள் கிரகத் தளம் : திங்களூர்

Please Wait while comments are loading...