அம்பாசமுத்திரம் - இயற்கை அன்னையின் உயிர் நாடி!

அம்பாசமுத்திரம் - தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய நகரம். தாமிரபரணி ஆறு ஓடும் இந்நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் துணை நகரமான கல்லிடைகுறிச்சி தாமிரபரணி ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ளது. மொத்தத்தில் இது ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான நகரம்.

அம்பாசமுத்திரம், விளாங்குறிச்சி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. அம்பாசமுத்திரம் என்ற வார்த்தை உருவானது 'அம்பா' மற்றும் 'சமுந்தர்' என்ற இரு வார்த்தைகளின் சேர்க்கையே. இந்த இடம் பல கோயில்களாலும், நீர் நிலைகளாலும் அமைந்திருப்பதால் இப்பெயரை பெற்றது.

அம்பாசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்கள்

இந்நகரம் மரத்தால் செதுக்கிய கைவினை பொருட்களுக்கு பெயர் போனது. பல கோயில்களையும் கிறிஸ்துவ தேவாலயங்களையும் கொண்டதாக விளங்குகிறது. இதில் புகழ் மிக்க கோவில்களாக இருப்பவை பாபநாசம் பாபனாசர் கோயில், மேலசேவல் நவநீதகிருஷ்ணன் கோயில், மேலசேவல் மேகலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் மேலசேவல் வேனுகோபாலசாமி கோயில் ஆகியவை.

இருப்பினும் இங்குள்ள ஈர்ப்பு மிக்க இடமாக கருதுவது முண்டந்துறை-களக்காடு புலிகள் காப்பகம். தர்பார் என்னும் மரபுத் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கொண்டாடப்படும்.

இதை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இது போக பாபநாசம் அணை, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அணை மற்றும் அருவி, காரையார் அணை, மாஞ்சோலை மலை மற்றும் விக்ரமசிங்கபுரம் என்று ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன.

அம்பாசமுத்திரம் வரும் சுற்றுலாப் பயணிகள் கை முறுக்கை தவறாமல் ருசி பார்த்து விட வேண்டும். அதே போல் படுத்துறங்கும் பாய்களுக்கும் அம்பாசமுத்திரம் புகழ் பெற்றது.

மொத்தத்தில் வன விலங்கு முதல் பறவைகள் வரை ரசிக்க, கோயில்கள் செல்ல, பொருட்கள் வாங்கி மகிழ, வரலாற்று கலைகள் என சகலத்தையும் இங்கே அனுபவிக்கலாம்.

அம்பாசமுத்திரத்தை அடைவது எப்படி?

விமானம் மூலம் அம்பாசமுத்திரம் வருபவர்கள் மதுரை அல்லது திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைய வேண்டும். சென்னையிலருந்து திருநெல்வேலிக்கு ரயில்கள் மூலம் வரலாம்.

திருநெல்வேலி ரயில் நிலையம் தான் அம்பசமுத்திரத்துக்கு மிக அருகாமையில் உள்ள ரயில் நிலையம். பின் திருநெல்வேலியிலருந்து பேருந்து மூலம் அம்பாசமுத்திரம் வந்து சேரலாம்.

அம்பாசமுத்திரம் வானிலை

பொதுவாக அம்பாசமுத்திரம் மிகவும் அனல் அடித்து மற்றும் ஈரத் தன்மையுடன் இருக்கும். இருப்பினும் பருவக்காலத்திற்குப்பின், அதாவது செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தான், அம்பாசமுத்திரம் வருவதற்கு உகுந்த காலமாக கருதப்படுகிறது. இக்காலமே மிதமான வெப்ப நிலையோடு சுகமாக இருக்கும்.

Please Wait while comments are loading...