Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» சுசீந்திரம்

சுசீந்திரம் – புனித யாத்திரை நகரம்!

6

தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் என்னும் புகழ்பெற்ற புனித நகரம் பக்தியும் சாந்தமும் பொருந்திய இடமாகும். இந்த நகரம் மிகவும் பிரசித்திபெற்ற யாத்திரை ஸ்தலமாக விளங்கக் காரணம், இங்கு அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி ஆலயம் ஆகும். இந்நகரமே பழங்கால திருவாங்கூர் சமஸ்தான கோட்டையாக விளங்கியது.

இங்கு மார்கழித்திருவிழா மற்றும் சித்திரைத் திருவிழா ஆகியவை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து பலமக்கள் இவ்விழாக்களில் பங்கு கொள்கின்றனர்.

மார்கழித் திருவிழா டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இறுதி நாளான ஒன்பதாவது நாளன்று, இந்து சமய கடவுளரின் சிலைகள் தேர்களில் ஏற்றப்பட்டு நகர் முழுதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

மற்றொரு திருவிழாவான சித்திரைத்திருவிழா ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. புகழ்பெற்ற தாணுமாலயன் ஆலயம் மட்டுமின்றி துவாரகைக் கிருஷ்ணர் கோவில், முன்னூற்றிநங்கைக் கோவில், சாஸ்தா ஆசிரமக் கோவில், கருப்பசாமி கோவில், தம்புரான் தம்புராட்டி கோவில், அக்கரைக் கோவில், அனுசூயா ஆத்ரி முனிவர் ஹோமகுண்டம், முத்தாரம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், பேரம்பலம் நடராஜர் கோவில் போன்ற பல கோவில்கள் இந்நகரத்தில் உள்ளன.

தாணுமாலயன் சுவாமி ஆலயத்தில், மூன்று இந்துக் கடவுள்கள்( சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மன்), ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருக்கும் விஷேசத்தாலேயே புனித யாத்திரை மேற்கொள்வோரை வெகுவாகக் கவரக் கூடிய இடமாக இது உள்ளது.

சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் சுவாமி ஆலயம் மற்றும் சுசீந்திரத்திற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற குளச்சல் என்ற நகரம் ஆகியவை மக்களைக் கவரக்கூடிய இடங்கள் ஆகும்.

சுசீந்திரத்திற்கு அருகாமையிலுள்ள விமான நிலையம், திருவனந்தபுரம் விமான நிலையம் ஆகும். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகாமையிலுள்ள இரயில் நிலையம் ஆகும். தென்னிந்திய நகரங்களிலிருந்து நேரடியாக பேருந்து மூலமும் சுசீந்திரம் செல்லலாம்.

இந்நகரத்தில் கோடைகாலங்களில் மட்டும் அதிக வெப்பநிலை காணப்படுகிறது. இதர காலங்களில் ஒரே மாதிரியான சீரான வெப்பநிலையே நிலவுகிறது.

சுசீந்திரம் சிறப்பு

சுசீந்திரம் வானிலை

சிறந்த காலநிலை சுசீந்திரம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சுசீந்திரம்

  • சாலை வழியாக
    கன்னியாகுமரி, பெங்களூர், சென்னை, திருவனந்தபுரம் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்நகரத்திற்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கன்னியாகுமரி இரயில் நிலையமானது சுசீந்திரத்திற்கு அருகாமையிலுள்ள இரயில் நிலையம் ஆகும். கன்னியாகுமரி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 1கிலோ மீட்டர் தூரத்தில் கன்னியாகுமரி ரயில் சந்திப்பு உள்ளது. அருகாமையில் உள்ள அடுத்த பெரிய ரயில் வண்டி நிலையம், திருவனந்தபுரம் ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து அனைத்து நகரங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு பெங்களூர் மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களிலிருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சுசீந்திரத்திற்கு அருகாமையிலுள்ள விமான நிலையம், திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இது கன்னியாகுமரியிலிருந்து 87 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு பல நகரங்களிலிருந்தும் வளைகுடா நாடுகளிலிருந்தும் விமானங்கள் வருகின்றன. விமான நிலையத்திலிருந்து மகிழுந்தில் கன்னியாகுமரி சென்று அதன்பிறகு சுசீந்திரம் செல்லவேண்டும். மகிழுந்து கட்டணமாக ரூ.1500 வரை வசூலிக்கப்படுகிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue