Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» திருவட்டாறு

திருவட்டாறு - புண்ணிய பூமி!

10

திருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.

மேலும் திருவட்டாறில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் கண்கவரும் வண்ணமாக இருக்கின்றன. பாரலீ மற்றும் கோதை என்னும் இரண்டு ஆறுகள் மூவட்டமுகம் என்னும் இடத்தில் இந்த பட்டணத்தை சுற்றி வளைத்து உள்ளன.

இதுவே இந்நகரின் பெயர்க்காரணமாக மாறிவிட்டது. ‘திரு’ என்றால் புனிதம், ‘வட்டம்’ என்றால் சுற்றியிருப்பது, ‘ஆறு’ என்றால் நதி, எனவே திருவட்டாறு என்றால் புனித நதிகளால் சூழப்பட்ட இடம் என்று பொருள்.

புனிதமான ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் திருவட்டாறுக்கு தெய்வீக தன்மையை கொடுக்கின்ற, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம் ஆகும்.  மாத்தூர் தொங்கு பாலம், புனித ஜேம்ஸ் தேவாலயம் (100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது), உதயகிரி கோட்டை மற்றும் தீர்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகியவை மற்ற புகழ்பெற்ற இடங்கள் ஆகும்.

இந்த பட்டணம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்பதால், சாலை மார்க்கமாக நாட்டின் பிற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டு இருப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

கன்னியாகுமரி தொடர்வண்டி நிலையமே இதற்கு அருகாமையில் இருக்கும் தொடர்வண்டி நிலையம் ஆகும். நெருக்கமான விமான தளம் திருவனந்தபுரம் விமான நிலையம்.

குளிர்க்காலத்தில் வானிலை இனிமையாக இருப்பதால், பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அக்காலத்திலேயே இந்த பட்டணத்திற்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். கோடையின் சுட்டெரிக்கும் வெயிலும், மழைக்காலத்தில் இங்கு உருவாகும் சூறாவழி புயல் காற்றும் பயணம் செய்வதை கடினமாக்குகின்றன.

திருவட்டாறு சிறப்பு

திருவட்டாறு வானிலை

சிறந்த காலநிலை திருவட்டாறு

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது திருவட்டாறு

  • சாலை வழியாக
    கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து திருவட்டாறை சாலை வழியாக அடைவது எளிது. தமிழகம் மற்றும் கேரள அரசாங்கங்கள் முக்கிய நகரங்களில் இருந்து திருவட்டாறுக்கு பேருந்துகளை இயக்குகின்றன. சாலைகள் நல்ல நிலையில் இருப்பதால், பேருந்து பயணம் வசதியாக இருக்கும். கன்னியாகுமரியில் இருந்து திருவட்டாறுக்கு ஒருவர் தனியார் சொகுசு வாகனத்தின் மூலமாகவும் செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கன்னியாகுமரி ரயில் நிலையமும், நாகர்கோவில் ரயில் நிலையமும் திருவட்டாறுக்கு மிகவும் நெருக்கமான ரயில் நிலையங்கள் ஆகும். இவ்விரண்டு ரயில் நிலையங்களும் நாட்டின் பிற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கேரளாவின் தலைநகராகிய திருவனந்தபுரத்தில் இருக்கும் விமானநிலையமே, திருவட்டாறுக்கு நெருக்கமான விமானநிலையம். திருவட்டாறில் இருந்து திருவனந்தபுரம் விமானநிலையம் 46 கி.மீ. தொலைவில் இருக்கிறது, அதை அடைய 3 1/2 மணிநேரம் தேவைப்படும். விமானநிலையத்தில் இருந்து நீங்கள் தனியார் சொகுசு வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். வாடகை சொகுசு வாகனத்தின் கட்டணம் ரூ.1000-1500 வரை இருக்கும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon