Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்பாசமுத்திரம் » வானிலை

அம்பாசமுத்திரம் வானிலை

மழைக்காலத்திற்கு பின், அதாவது அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை, அம்பாசமுத்திரத்திற்கு பயணிப்பதே மிகவும் சிறந்தது. வானிலையம் ரம்மியமாக இருக்கும். இருப்பினும் இக்காலத்திற்கு ஏற்ப ஆடைகளை கொண்டு சென்றால் சுற்றுலாவை தடையின்றி மகிழலாம்.

கோடைகாலம்

பொதுவாக கோடை காலத்தில் அம்பாசமுத்திரம் கடும் வெயிலோடும் ஈரத்தன்மையோடும் விளங்கும். இந்த நேரத்தில் இங்கு வருவதை பெரும்பாலும் தவிர்க்கலாம். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் தான் கோடை காலத்து மாதங்கள். இக்காலங்களில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.

மழைக்காலம்

மழைக்காலம் ஜூன் மாதம் ஆரம்பித்து அக்டோபர் மாதம் இறுதி வரை நீடிக்கும். மழைக்காலம் வெப்பத்தை தனித்து சுகமளிக்கும்.

குளிர்காலம்

குளிர் காலம் என்று தனிப்பட்டு அம்பாசமுத்திரத்தில் இருக்காது. இந்நேரங்களில் வெப்ப நிலை ரொம்பவும் கீழே இறங்காது. ஆயினும் வெப்ப நிலை மிகவும் நன்றாக இருக்கும். வெப்ப நிலை 26 முதல் 33 டிகிரி செல்சியசாக இருக்கும். இக்காலமே அம்பாசமுத்திரத்தை சுற்றி பார்க்க சிறந்த காலம்.