Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருநள்ளாறு » வானிலை

திருநள்ளாறு வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரை, வெப்பம் தணிந்து, ஓரளவுக்கு ஜில்லென்று இருக்கும். அந்த காலத்தில்   திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபடுதல் மிகவும் ஏற்புடையதாக இருக்கும். வான் நிலை, வெப்பம் தாண்டி , பொதுவாக சனிப்பெயர்ச்சி நாட்களில் திருநள்ளாறு சென்று வழிபடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். 

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : திருநள்ளாறு ஒரு வெப்ப மண்டலம். ஆகவே கோடை காலத்தில் இங்கு 28 முதல் 44 டிகிரி  செல்சியஸ் வெப்பம் இருக்கும்.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை): ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் நல்ல மழை பொழியும் இடமாக திருநள்ளாறு உள்ளது. வெப்பமும் குறைந்து, சுற்றிப் பார்க்க இனிமையாக இருக்கும். இருப்பினும், மழை தொடர்பான தகவல்களை சேகரித்து பின்னர் அங்கு பயணிப்பது சிறந்தது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): குளிர் காலத்தில் சுமார் 20 டிகிரி முதல் 30 டிகிரி வரை வெப்ப நிலை இருக்கும். இக்காலகட்டத்தில், திருநள்ளாறு மிகவும் அருமையான சீதோஷன நிலையில் இருக்கும்.