ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்!

ஆலங்குடி தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். இது மன்னார்குடி அருகே உள்ள கும்பகோணத்தில் இருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலங்குடி அருகே உள்ள முக்கிய நகரம் கும்பகோணம் ஆகும்.  நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான இது வியாழன் (ப்ருஹஸ்பதி / குரு பகவான் ) கிரஹத்திற்கானது. ஆலங்குடி , ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்திற்காக புகழ் பெற்றது. கும்பகோணம் அல்லது நீடாமங்கலத்தில் இருந்து பயணிகள் பேருந்து மற்றும் சிற்றுந்து வழியாக இக்கோயிலை அடையலாம்.

ஆலங்குடி வரலாறு

ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் மூலவர், இந்தப்  புண்ணியத்  தலத்தில் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான்  ஆவார். பார்வதி தேவி இங்கு ஏலவர்குழலி அல்லது உமை அம்மை என்று அழைக்கப்படுகிறார்.

முன்பொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முற்பட்டனர்.  அவர்கள் தேவாமிர்தத்தை பெறுவதற்காக வாசுகி என்ற தேவலோக பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர்.

அப்போது அந்தப் பாம்பு கக்கிய ஆலகால விஷத்தை , சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி உலகைக் காத்ததால் சிவபெருமான் ரட்சகர் என்று பொருள் படும் படி ஆபத்சகாயேஸ்வரர் என்று அன்போடு அழைக்கப் படுகிறார். இந்த இடமும் ஆலங்குடி என்று புகழ் பெற்றது.

சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி பிருஹஸ்பதி அல்லது குரு பகவானை (வியாழன்) வழிபட  மக்கள்  தொலைவிலும் அருகிலும் இருந்து கூட்டமாக வருகின்றனர். எல்லா வருடமும் குருப் பெயர்ச்சியின் பொது துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபெற விக்ரஹத்திற்கு மங்கள அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

ஆலங்குடி அருகிலுள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள்

குரு பகவானுக்கான நவக்ரஹ ஸ்தலமான ஆலங்குடிக்கு மிக அருகில் ஏனைய எட்டு நவக்கிரக ஸ்தலங்களான திருநள்ளாறு (சனி பகவான்), கஞ்சனூர் (சுக்கிரன்), சூரியனார் கோயில் (சூரியன்), திருவெண்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (ராகு), திங்களூர் (சந்திரன்), கீழ்பெரும்பள்ளம் (கேது) ஆகியவை அமைந்துள்ளன.

ஆலங்குடியை அடைவது எப்படி?

ஆலங்குடியை அடைய கும்பகோணம் முக்கிய ரயில் நிலையமாகும். மற்றொரு ரயில் நிலையமான நீடாமங்கலம் ஆலங்குடியில் இருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் அல்லது நீடாமங்கலத்தில் இருந்து பயணிகள் பேருந்து மற்றும் சிற்றுந்து வழியாக ஆலங்குடியை அடையலாம்.

ஆலங்குடியின் காலநிலை

ஆலங்குடியின் காலநிலையானது எப்போதும் சற்று வெப்பமாகவே காணப்படும்.

Please Wait while comments are loading...