Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» தரங்கம்பாடி

தரங்கம்பாடி - நீலக்கடலின் முடிவில்லா கீதங்கள்!

7

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் ட்ரான்குபார் என்ற நகரம் தான் தரங்கம்பாடி என்று அழைக்கப்பட்டு வந்தது. தரங்கம்பாடி என்ற வார்த்தைக்கு 'அலைகள் கவி பாடும் இடம்' என்று பொருளாகும். 1620 முதல் 1845-ம் ஆண்டுவரை முன்னாள் டச்சு காலனியாக இருந்த இவ்விடம், இன்றும் டேனிய மொழியில் ட்ரான்கிபார் என்று அழைக்கப்படுகிறது.

தரங்கம்பாடி 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து 19-ம் நூற்றாண்டு வரை தரங்கம்பாடி டச்சு நாட்டினரின் காலனியாகவும், முக்கியமான துறைமுகமாகவும் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

1845-ம் ஆண்டு இத்துறைமுக நகர் ஆங்கிலேயர்களுக்கு விற்கப்பட்டாலும், 1808 மற்றும் 1814-ம் ஆண்டுகளின் ஐரோப்பாவின் நேப்போலியன் போர்க்காலங்களில் இப்பகுதி ஆங்கியேர்களின் வசத்தில் இருந்தது.

நாகப்பட்டினத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்ட போது, இந்நகரம் ஒரு சுறுசுசுறுப்பான துறைமுக நகரம் எனற பெருமையை இழந்தது.

தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

கடலையொட்டி அமைந்துள்ள தரங்கம்பாடி நகரத்தில், இன்று அதன் அலைகளின் கீதங்களும் கூட குறைவாகவே ஒலிக்கின்றது. இன்னமும் யாரும் கிளராத இடமாகவே உள்ள தரங்கம்பாடி, தமிழக கடற்பகுதிகளில் மிகவும் குறைவாகவே ஆராங்ந்து பார்க்கப்பட்ட இடமாக உள்ளது.

தரங்கம்பாடிக்கு வருவதற்கு மற்றும் ஒரு முக்கிய காரணமாக அங்குள்ள டேனிஷ் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைச் சொல்லலாம். இந்தியாவில் வேறெங்கும் எளிதில் கிடைக்காத டேனிஷ் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ள டேன்ஸ்போர்க் (டேனிஷ் கோட்டை) இதில் முக்கியமான ஒன்றாகும்.

பெருமளவிலான கிறித்தவ மிஷனரி அமைப்புகள் தரங்கம்பாடியில் தங்கள் தளத்தை அமைத்துக் கொண்ட காரணத்தினால், தரங்கம்பாடி நகரத்தில் நிறைய தேவாலாயங்களையும் காண முடியும். இங்கிருக்கும் பிற சுற்றுலா தலங்களாக டேனிஷ் மியூசியத்தையும் மற்றும் தரங்கம்பாடி கடற்கரையையும் சொல்லலாம்.

தரங்கம்பாடியை அடையும் வழிகள்

நல்ல போக்குவரத்து வசதியை உடைய தரங்கம்பாடி நகரம், சென்னைக்கு அருகிலேயே உள்ளது.

தரங்கம்பாடியின் பருவநிலை

தரங்கம்பாடியின் பருவநிலை தமிழ்நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வெப்பமாகவும், அனலாகவும் வருடத்தின் பெரும்பாலன நாட்கள் இருந்தாலும், மழைக்காலங்களில் சற்று நல்ல சீதோஷ்ணத்துடன் காணப்படும்.

தரங்கம்பாடி சிறப்பு

தரங்கம்பாடி வானிலை

சிறந்த காலநிலை தரங்கம்பாடி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தரங்கம்பாடி

  • சாலை வழியாக
    சாலைப் போக்குவரத்தின் மூலமாக பல்வேறு மார்க்கங்களில் தரங்கம்பாடியை அடைய முடியும். சென்னைக்கு அருகிலிருக்கும் நகரமான தரங்கம்பாடி, பாண்டிச்சேரியின் ஆட்சிப்பகுதியான காரைக்காலில் இருந்து 15 கிமீ தொலைவிலேயே உள்ளது. இந்த இரு இடங்களிலிருந்துமே பேருந்துகள் தொடர்ச்சியாக தரங்கம்பாடிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தஞ்சாவூர், பெங்களூர், திருவாரூர் மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து தொடர்ச்சியாக பேருந்துகள் தரங்கம்பாடிக்கு இயக்கப்படுகின்றன. ரூ.200/- முதல் ரூ.500/- க்குள் பேருந்து கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தரங்கம்பாடிக்கு மிகவும் அருகிலிருக்கும் இரயில் நிலையங்களாக சிதம்பரம் மற்றும் நாகப்பட்டினம் இரயில் நிலையங்கள் உள்ளன. இந்த இரு இடங்களிலிருந்துமே பேருந்துகள் தொடர்ச்சியாக தரங்கம்பாடிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தரங்கம்பாடிக்கு இரயில் வழியாக பயணம் செய்வது மிகவும் சிக்கனமான பயணமாக இருக்கும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    தரங்கம்பாடிக்கு மிகவும் அருகிலிருக்கும் விமான நிலையமான சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து அடிக்கடி உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடனேயே தரங்கம்பாடிக்கு செல்ல டாக்ஸிகள் அல்லது பேருந்துகள் எளிதில் கிடைக்கும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
13 Aug,Thu
Return On
14 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
13 Aug,Thu
Check Out
14 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
13 Aug,Thu
Return On
14 Aug,Fri