சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை என்று பொருள் படும். ஆனால் சுவாமிமலையின் பண்டைகாலப் பெயர் திருவேரகம் என்பதாகும்.

இவ்விடத்தினைச் சுற்றிலும் தெய்வ பிரசன்னம் இருப்பதை தெளிவாக உணர முடியும். தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளில் சுவாமிமலையும் ஒரு படைவீடாகும்.

மாநிலத்திலேயே வெண்கலக் காசுகள் செய்யக் கற்றுத்தரும் ஒரே பள்ளி இங்குதான் உள்ளது. இயற்கையாகவே வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்துள்ள இந்நகரத்தில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு வேளாண்மைப் பொருள்கள் நெல்லும், கரும்புமாகும்.

வரலாற்றுப் பின்புலம்

காவிரியாற்றின் கிளையாறு ஒன்றின் கரையில் அமைந்துள்ள சுவாமிமலையானது முருகப் பெருமான் என்று அழைக்கப்படும் கார்த்திகேயக் கடவுளின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாகக் கருதப்படுகிறது.

இத்தலத்தோடு தொடர்புடைய புராணங்களின்படி, முருகப் பெருமான் "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தனது தந்தையான சிவபெருமானுக்கு உரைத்த தலம் சுவாமிமலையாகும்.

இக்கோவிலின் ராஜகோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளில், மந்திரத்தின் பொருளை விளக்கும் முருகப்பெருமான் குருவாகவும், மந்திரப் பொருளை காதில் கேட்கும் சிவபெருமான் சீடனாகவும் செதுக்கப்பட்டுள்ளனர்.

இப்புராணக் கதையின் விளைவாகவே இவ்வூருக்கு சுவாமிமலை என்னும் பெயர் வந்தது. மேலும் இங்குள்ள முருகப் பெருமான் சுவாமிநாதன் என்று அழைக்கப்படுகிறார்.

திருவிழாக்கள்

கோவில்கள் நிறைந்த நகரமான கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் அமைந்திருப்பதால், ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் சுவாமிமலைக்கு வருகைபுரிகிறார்கள்.

ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா, மார்ச் மாதத்தில் நடைபெறும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட பிரபலமான திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. மே மாதத்தில் வைகாசி விசாகத்திருவிழாவும், அக்டோபர் மாதத்தில் கந்த சஷ்டித்திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.

Please Wait while comments are loading...