Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் - கடவுள்களின் உறைவிடம்!

60

தமிழ் நாடு மாநிலத்தின் கிழக்கு கிடற்கரையில் உள்ள கறைபடாத, அமைதியான நகரம் பாம்பன் தீவின் ஒரு பகுதியாக உள்ள இராமேஸ்வரம் நகரமாகும். பாம்பன் கால்வாய் வழியாகவே இந்த நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மன்னார் தீவுகள் இராமேஸ்வரத்திற்கு அருகிலேயே 50 கிலோமீட்டர் தொலைவிலேயே இருந்தாலும் கடல் வழியாக செல்வதாக இருந்தால் 1403 கிலோமீட்டர் தூரம் சுற்றித்தான் செல்லவேண்டும்.

இந்துக்களின் புனிதத் தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இராமேஸ்வரத்திற்கு கண்டிப்பாக ஒவ்வொருவரும் 'சார் தம்யாத்ரா' அல்லது புனிதப் பயணம் செய்ய வேண்டும்.

மகா விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், இலங்கை மன்னன் இராவணன் கடத்திச் சென்று சிறை வைத்த தன்னுடைய மனைவி சீதா தேவியை மீட்கும் பொருட்டாக, இலங்கைக்கு தரைப்பாலத்தைக் கட்டிய இடம் தான் இன்றைய இராமேஸ்வரம் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

இராமேஸ்வரா என்ற பெயருக்கு 'இராமபிரான்' என்று அர்த்தம் தருவதால், இராமரின் பெயராலேயே இந்த இடத்திற்கு இராமேஸ்வரம் என்ற பெயர் வரப்பெற்றது. இராமபிரானை வணங்குவதற்காக இங்கு கட்டப்பட்டுள்ள மிகவும் புகழ் பெற்ற கோவிலான ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் இந்நகரத்தின் மையத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து இராமநாத கடவுளின் ஆசியையும், பிரார்த்தனையும் பெற்றுச் செல்கின்றனர்.

மேலும் இராமேஸ்வரம் என்ற இந்த இடம் இராமபிரான் போரினால் தான் செய்த பாவங்களை நீக்க தேர்ந்தெடுத்த இடமாகவும் நம்பப்படுகிறது. பிராமண அரசனான இராவணனை கொன்ற பின் இந்த இடத்தில் நோன்பிருக்க இராமபிரான் மிகவும் விரும்பினார்.

மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்றை இங்கே பிரதிஷ்டை செய்ய விரும்பிய இராமர், அனுமனிடம் இமயத்திலிருந்து லிங்கத்தை கொண்டு வர பணித்தார். இதற்கு வெகு நேரம் ஆனதால், இடைப்பட்ட நேரத்தில் சீதா தேவி வேறு ஒரு லிங்கத்தை இங்கே கட்டிவிட்டார்.இந்த சிவலிங்கம் தான் இன்னமும் ராமநாதசுவாமி கோவிலில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வரலாற்றின் பாதையில் இராமேஸ்வரம்

இந்தியாவின் வரலாற்றில், குறிப்பாக வெளிநாடுகளுடன் வாணிபம் செய்வதில் இராமேஸ்வரம் முக்கிய பங்காற்றியுள்ளது. முந்தைய காலத்தில் சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கைக்கு செல்லும் வழியில் நின்று செல்லும் இடைநிறுத்தமாக இராமேஸ்வரம் இருந்தது.

உண்மையில், இலங்கையின் ஜாப்னா பகுதியை அரசாண்டு வந்த ஜாப்னா அரசவம்சம் தங்களை இராமேஸ்வரத்தின் காவலர்கள் என்று பொருள் படும் சேது காவலன் என்ற பெயரில் அழைத்துக் கொள்கிறார்கள்.

மேலும் டெல்லி சுல்தானிய அரசுகளில் ஒன்றான சேர்ந்த கில்ஜி வம்சத்திற்கும் இராமேஸ்வரத்துடன் தொடர்புள்ளது. கில்ஜி வசம்சத்தின் படைத்தளபதியான அலாவுதீன் கில்ஜி, பாண்டிய மன்னர்களின் எதிர்ப்பையும் கடந்து இராமேஸ்வரத்திற்கு வந்துவிட்டார்.

தன்னுடைய வருகையின் அடையாளமாக இராமேஸ்வரத்தில் அலாவுதீன் கில்ஜி மசூதியை கட்டினார். 16வது நூற்றாண்டில் விஜயநகர அரசர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்த இராமேஸ்வரம், 1795-ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இராமேஸ்வரத்தை கைப்பற்றும் வரை அவர்களின் கையிலேயே இருந்து வந்தது.

பல்வேறு கலாச்சாரங்களின் தாக்கத்தை இராமேஸ்வர மக்களின் தினசரி நடவடிக்கைகள் மற்றும் அங்கிருக்கும் கட்டிடங்களின் வடிவமைப்புகள் ஆகியவற்றில் இன்றும் காண முடிகின்றது.

கோவில்களும், புனிதத் தீர்த்தங்களும்

இராமேஸ்வரத்தின் முக்கியமான பார்வையிடங்களாக அங்கு கட்டப்பட்டுள்ள சிவபெருமான் மற்றும் விஷ்ணுவிற்கான கோவில்களும் மற்றும் இராமேஸ்வரத்தை சுற்றியுள்ள எண்ணற்ற புனித தீர்த்தங்களும் இருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் உலகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்துக்கள் மோட்சம் பெறவும், சாப விமோச்சனம் பெறவும் இராமேஸ்வரத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த கோவிலுக்கு வந்திருந்து இங்கிருக்கும் தெய்வத்திற்கு மரியாதை செய்வது ஒவ்வொரு இந்துவிற்கும் வாழ்க்கையின் இன்றியமையாத கடமையாகும்.

இராமேஸ்வரத்தில் 64 புனித தீர்த்தங்கள் அல்லது புனித நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் முக்கியமானதாக கருதப்படும் 24 தீர்த்தங்களில் குளிப்பது நமது பாவத்தை களைந்து விடும் என்று நம்பப்படுகிறது.

மோட்சத்தை அடைவதற்கு முதன்மையான வழியாக கருதப்படுவது பாவங்களை களைவது தான், அதற்கு இங்கிருக்கும் புனித தீர்த்தங்களில் நீராடுவதைத் தவிர வேறு வழிகளும் இல்லை. உண்மையில், இந்த 24 தீர்த்தங்களிலும் நீராடுவது மூலம் நமது பாவங்களை நேரடியாக நாமே தீர்த்துக் கொள்ளும் வழிமுறையாகும்.

இராமேஸ்வரத்தில் இந்துக்களுக்கான மதமுக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. இவற்றில் ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில், 24 கோவில் தீர்த்தங்கள், கோதண்டராமர் கோவில், ஆதாம் பாலம் அல்லது ராம் சேது மற்றும் நம்பு நாயகி அம்மன் கோவில் ஆகியவை அவற்றில் சிலவாகும்.

இராமேஸ்வரம் நன்றாக இணைக்கப்பட்ட இரயில் நிலையத்தையும், சிறந்த சாலை வசதிகளையும் கொண்டுள்ள சுற்றுலா தலமாகும். இராமேஸ்வரத்திற்கு மிகவும் அருகிலிருக்கும் விமான நிலையம் மதுரை விமான நிலையமாகும். சுட்டெறிக்கும் கோடைகாலங்களையும், மகிழ்ச்சியூட்டும் குளிர்காலங்களையும் இராமேஸ்வரம் பெற்றிருக்கிறது.

இராமேஸ்வரம் சிறப்பு

இராமேஸ்வரம் வானிலை

சிறந்த காலநிலை இராமேஸ்வரம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது இராமேஸ்வரம்

  • சாலை வழியாக
    இராமேஸ்வரம் சாலை வழியாக சென்னையுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் தொடர்ச்சியாக சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. நல்ல சொகுசான வோல்வோ பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் என எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். வோல்வோ பேருந்து கட்டணம் ரூ.500/- ஆகவும், மாநில அரசுப் பேருந்துகள் கட்டணம் ரூ.100-1500/- ஆகவும் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தென்னக இரயில்வேவின் வலுவான தொடர்புகளால் சென்னை இரயில் நிலையம் மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு நான்கு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இரண்டு இரயில்கள் தினசரி இரயில்களாகவும், ஒன்று ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் மற்றொன்று சனிக் கிழமைகளிலும் இயங்குகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    இராமேஸ்வரத்திற்கு மிகவும் அருகிலிருக்கும் விமான நிலையம் மதுரையில் உள்ளது. சென்னை விமான நிலையத்துடன் நல்ல தொடர்பிலிருக்கும் மதுரை விமான நிலையத்திற்கு தொடர்ச்சியான இடைவெளிகளில் விமானங்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை அல்லது சென்னை விமான நிலையத்திலிருந்து நீங்கள் வெளியில் வந்தவுடன் ஒரு டாக்ஸியை அமர்த்திக் கொண்டு விரைவாக இராமேஸ்வரத்தை உங்களால் அடைய முடியும். இதற்கான டாக்ஸி கட்டணம் இந்திய மதிப்பில் ரூ.3500/- முதல் ரூ.5000/- வரை இருக்கும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed