Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இராமேஸ்வரம் » வானிலை

இராமேஸ்வரம் வானிலை

சூரியன் சுட்டெறிக்காத குளிர்காலம் தான் இராமேஸ்வரத்திற்கு வர சிறந்த சீசன் ஆகும். இந்த நாட்களில் காலை மற்றும் மதிய வேளைகளில் வெளியே சுற்றக் கிளம்பும் சுற்றுலாப் பயணிகள் மாலை வரை தங்கு தடையின்றி சுற்றிப் பார்க்க முடியும். இந்நாட்களில் நிலவும் நிலையான வெப்பநிலை மற்றும் மென்மையான சூரிய வெப்பம் நமது உடலை சுட்டுவிடாமல், நாம் பொறுமையாக மனமுருக கோவில்கள் செல்வதற்கும் மிகவும் ஏற்ற பருவமாகும்.

கோடைகாலம்

மார்ச் மாதத்தின் இறுதியில் இராமேஸ்வரத்தில் தொடங்கும் கோடைக்காலம் மே மாதத்தின் இறுதி வரை நீடித்திருக்கும். பொதுவாகவே மிகவும் வெப்பமாக இருக்கும் பகல் பொழுதுகள் தவிர, கடல் காற்றின் புண்ணியத்தால் மாலைப்பொழுதுகள் சற்றே குளிர்ச்சியானதாக அமைந்த கோடைக்காலத்தை இராமேஸ்வரம் பெற்றிருக்கும். எனினும் பகல் நேரங்களில் வெளியில் வந்து ஊர் சுற்றிப் பார்க்க நினைத்தால் சுட்டெறிக்கும் சூரியன் உங்களை களைப்படையச் செய்து விடும்.

மழைக்காலம்

மழைக்காலமான ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இராமேஸ்வரம் கனத்த மழையைப் பெறும். சில நாட்களில் மழைக்காலம் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரையிலும் கூட நீடித்திருக்கும். இந்த நாட்களில் தொடர்ச்சியான மழைப்பொழிவின் காரணமாக இராமேஸ்வரம் நகரம் குழைவான சகதிகளுடனும் மற்றும் சேறாகவும் இருக்கும். இந்த நாட்களில் வெப்பநிலை குறைவாக இருந்தாலும் கூட, புயல் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மழைக்காலத்தைத் தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

நவம்பர் மாதத்தின் மத்திய பகுதியில் இராமேஸ்வரத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை தொடரும். வடமாநிலங்களைப் போல இராமேஸ்வரம் குளிர்காலங்களில் மிகவும் குளிராக இருக்காது. மகிழ்ச்சிகரமான பகல் பொழுதுகளையும், வெளியில் சுற்ற ஏற்ற பருவத்தையும் பெற்றிருப்பதால் குளிர்காலத்தில் பெரும்பாலான மக்களை வெளியே பார்க்க முடியும். இரவுப் பொழுதுகள் சற்றே குளிராக இருக்குமாதலால் மெல்லிய சால்வைகள் மற்றும் ஜாக்கெட்களை எடுத்துச் செல்வது நல்லது.