Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» மயிலாடுதுறை

மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்!

15

மயிலாடுதுறை என்ற வார்த்தையின் நேரடியான அர்த்தம் 'மயில்களின் நகரம்' என்பதாகும். இந்த மயிலாடுதுறை என்ற வார்த்தை 'மயில்' என்ற பறவையின் பெயரும், 'ஆடும்' என்ற நடனத்தை குறிக்கும் சொல்லும் மற்றும் 'துறை' என்று நகரத்தைக் குறிக்கும் மூன்று வார்த்தைகளும இணைந்த கலவையே! முன்பொரு காலத்தில் சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியார் சிவனின் சாபத்திற்குள்ளாகி, பெண் மயில் போன்று தோற்றம் பெற்று, இந்த இடத்தில் இருந்த சிவபெருமானை வணங்கி வந்தார். இதன் காரணமாகவே இந்த நகரத்திற்கு  மயிலாடுதுறை என்னும் பெயர் வந்தது.

முந்தைய காலங்களில் 'மாயூரம்' என்ற சமஸ்கிருத பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் இன்று 'மயில் நகரம்' என்று பொருள் தரும் 'மயிலாடுதுறை' என்று மாற்றப்பட்டுள்ளது.

இன்று மிகவும் நவீனமான வளர்ந்து வரும் நகரமாக மயிலாடுதுறை இருந்தாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, அதன் உறுதியான, மறுக்க முடியாத வரலாறும் பின் தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது.

மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதசுவாமி கோவில் அதன் வரலாற்றை நினைவுபடுத்தும் சின்னமாகும். சிவபெருமானுக்கான இந்த கோவில் இந்நகரத்தின் பெயரையும் தன்னுடனே இணைத்துள்ளது.

இக்கோவிலின் முதன்மை கடவுளான சிவபெருமானை மயில் வடிவத்திலிருந்த பார்வதி தேவி வணங்கியதால் இவர் மயூரநாதர் என்றழைக்கப்படுகிறார். இந்த கதைகள் நிரூபிக்கப்பட்டாலும், நிரூபிக்கப்படாவிட்டாலும் இந்த பெயர் மட்டும் காலங்களை கடந்து நின்று கொண்டிருக்கிறது.

மயிலாடுதுறையை சுற்றியுள்ள முக்கியமான சுற்றுலா தலங்கள்

காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் உள்ள எண்ணற்ற மற்றும் குறிப்பிடத்தக்க இந்து கோவில்கள் மயிலாடுதுறையை பிரபலமான சுற்றுலாத்தலமாக இருக்க வைக்கின்றன.

ஸ்ரீ வதனீஸ்வரர் கோவில், புனுகீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம், ஸ்ரீ பரிமளா இரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில், குறுங்கை சிவன் கோவில் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் ஆகியவை தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளிலுமுள்ள பக்தர்களையும் கவர்ந்திழுக்கும் கோவில்களாகும். இங்கிருக்கும் 9 கோவில்களும் பக்தர்களுக்கு அருள் தரும் வகையில் 'நவக்கிரக' சுற்றூலவிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.

சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெங்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம் மற்றும் கீழபெரும்பள்ளம் ஆகியவை மயிலாடுதுறையின் புனித சுற்றுலா வளையத்திற்குள் வரும் முக்கியமான சுற்றுலாத்தலங்களாகும்.

மயிலாடுதுறையிலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் சூரியனார் கோவிலை சுற்றிய இந்த புனித சுற்றுலா வளையத்தில் பிற கோவில்களும் கட்டப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையிலிருந்து 40 கிமீ மேற்காக அமைந்துள்ள திங்களூர் சந்திரர் கோவில் பக்தர்களின் மனோரீதியான குறைகளை களையும் இடமாக உள்ளது. பக்தகோடிகள் இந்த கோவிலுக்கு வருவதன் மூலம் அவர்களுடைய மலை போன்ற துன்பங்கள் பனியாக விலகுவதுடன், அவர்களுடைய மனக்குறைகளும் நீங்கும்.

மயிலாடுதுறையிலிருந்து 12 கிமீ கிழக்காக இருக்கும் வைத்தீஸ்வரன் கோவில் தான் இராமாயணத்தில் இராவணனால் வதம் செய்யப்பட்ட கழுகு அரசன் ஜடாயு மோட்சமடைந்த இடமாகும்.

இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் 'ஜடாயு குண்டம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமான் பக்தர்களின் நோய்களை தீர்ப்பவராவார்.

இந்த கோவில் நாடி ஜோதிடம் வழியாக எதிர்காலத்தின் ராசி பலன்களை சொல்லும் ஜோதிடர்களுக்காக மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும். மயிலாடுதுறையிலிருந்து 24 கிமீ தொலைவில் கிழக்கு திசையில் இருக்கும் திருவேற்காடு கோவில் 'சைவத் திருமுறைகள்' என்றும் அழைக்பப்படுகிறது.

தேர்வு முடிவுகள் நல்லதாக அமைய வேண்டுமென்பதற்காக மாணவர்கள் இக்கோவிலுக்கு வருவது இதன் சிறப்பு! குரு தேவருக்காக, மயிலாடுதுறையிலிருந்து 40 கிமீ தொலைவில் ஆலங்குடியிலுள்ள கோவிலில் குரு தேவர் பழைய வழக்கப்படி சிலையாக வைக்கப்படாமல் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

மயிலாடுதுறைக்கு 20 கிமீ தொலைவில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள கோவில் காஞ்சனூர் சுக்கிரன் கோவிலாகும். சுக்கிரரின் அருள் பெறுபவர்களை செல்வமும், வளமும் சூழ்ந்திருக்குமென்பது பொதுவான நம்பிக்கை!

மயிலாடுதுறையிலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருநள்ளாறு சனி பகவானுக்காக முழுமையாக கட்டப்பட்டுள்ள கோவில்களில் ஒன்றாகும். நள மகாராஜவைப் பிடித்துக் கொண்டு பெரும் தீங்கு செய்து வந்த சனியின் கொடுமைகளிலிருந்து அவரை விடுவித்ததன் காரணத்தால் நள + ஆறு  = திருநள்ளாறு என்று இரு வார்த்தைகளைக் கொண்டு இந்நகரத்தின் பெயர் வைக்கப்பட்டது.

இக்கோவிலில் உள்ள நள தீர்த்தத்தில் மூழ்கி எழுவதன் மூலம் சனி பகவானின் கொடுமையான தீங்குகளும் மற்றும் முன் ஜென்ம பாவங்களும் விலகும் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானுக்கான கோவிலாகும். எனினும், ஒவ்வொரு நாளும் ராகு காலத்தில் நடத்தப்படும் பாலாபிஷேகத்தால் ராகு கடவுளும் புகழ் பெற்றவராக இக்கோவிலில் உள்ளார்.

இதில் கவனிக்கத்தக்க மற்றும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வெண்மை நிற பாலை ராகுவின் மேல் ஊற்றும் போது, அது நீல நிறமாக மாறி அவருடைய உடலை அரவணைத்துச் செல்லும், பின்  தரையைத் தொடும் போது மீண்டும் அதே வெண்மை நிறத்தைப் பெறுவதுதான்!

ராகு கடவுள் அவருடைய துணைவியார்களுடன் இருக்கும் சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும். திருவேற்காட்டிற்கு அருகிலிருக்கும் கீழபெரும்பள்ளம் கேது கடவுளுக்கான கோவிலாகும்.

வானகிரி என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலில் கேது கடவுள் பாம்புத் தலை மற்றும் அசுரனின் உடலுடன் காடசியளிக்கிறார். இந்த கோவிலில் கேது கடவுளை, சிவபெருமான் வணங்கி தான் செய்த தவறுகளிலிருந்து விடுவிக்க கோரியதாக நம்பப்படுகிறது. எனவே தான் இங்கிருக்கும் சிலை 'வணங்கும் நாகநாதர்' (சிவபெருமான்) சிலையாக கூப்பிய கரங்களோடு உள்ளார்.

பக்தர்கள் நவகிரக சுற்றுலாவின் போது இந்த ஒன்பது கிரக / நட்சத்திர கோவில்களுக்கும் சென்று கடவுளை வேண்டுவர். இங்கு வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், இந்த நவகிரகங்களை வேண்டுவதால் உண்மையிலேயே வளமான, நலமான மற்றும் நெடிய வாழ்க்கை கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

புதிய கற்கால தமிழ் நாட்டிற்கும், ஹரப்பா நாகரிகத்திற்குமான ஒரு தொடர்பு!!

வி.சண்முகநாதன் என்ற பள்ளி ஆசிரியர் 2006-ம் ஆண்டு தன்னுடைய வீட்டின் கொல்லைப்புறத்தை சிறிதளவு தோண்டிய போது அவர் எதிர்பார்த்தது மண்ணை மட்டுமேயொழிய, வரலாற்றுடன் தொடர்புடைய அரிய பொருட்களையல்ல! வரலாற்றறிவு பெற்றிருந்த வி.சண்முகநாதன் தன்னிடம் கிடைத்த பொருட்கள் கற்துண்டுகளும் வெவ்வேறு விதமான காலகட்டத்தைச் சோந்தவை என்பதை அறிந்தார்.

இங்க கண்டெடுக்கப்பட்ட புதிய கற்கால கருவியான கற்கோடாரியில் சிந்து சமவெளியின் மொழியில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள், தமிழக மக்கள் சிந்து சமவெளி நாகரிக மக்களுடன் கொண்டிருந்த தொடர்பை விளக்குவதாக உள்ளன.

இதனை அரிய நிகழ்வாக கருதும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், திரும்பிய பக்கமெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மயிலாடுதுறையில் கிடைத்த இந்த வராலாற்று சின்னங்களின் முக்கியத்துவத்தை உயர்வாக மதிப்பிடவும் தவறவில்லை.

மயிலாடுதுறை உண்மையில் வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கையில் கிடைத்த தங்கக் கோப்பையாகும். 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்று பரவலாக பயன்படுத்தப்படும் பேச்சு வழக்கு வார்த்தைக்கு 'ஆயிரம் வெவ்வேறு இடங்களில், ஆயிரமாயிரம் சிறப்பம்சங்கள் இருந்தாலும் அவையனைத்தும் மாயவரத்திற்கு (மயிலாடுதுறை) ஈடாகாது' என்று அர்த்தமாகும்.

இதனை உண்மையாக்கும் விதத்தில் வரலாற்று மற்றும் நவீன காலத்திலும் சிறந்து விளங்கும் நகரமாக மயிலாடுதுறை உள்ளது.

மயிலாடுதுறையை அடைவது எப்படி?

மயிலாடுதுறையை சாலை மற்றும் இரயில் மார்க்கமாக எளிதில அடைய முடியும்.

மயிலாடுதுறை வருவதற்கு சிறந்த காலம்

குளிர்காலத்தில் மயிலாடுதுறைக்கு வருவது சிறந்த அனுபவத்தைத் கொடுக்கும்.

மயிலாடுதுறை சிறப்பு

மயிலாடுதுறை வானிலை

சிறந்த காலநிலை மயிலாடுதுறை

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மயிலாடுதுறை

  • சாலை வழியாக
    மயிலாடுதுறை சாலை மற்றும் இரயில் வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ள நகரமாகும். கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள மயிலாடுதுறைக்கு சென்னையிலிருந்து 271 கிமீ, சிதம்பரத்திலிருந்து தெற்காக 40 கிமீ, தஞ்சாவூரிலிருந்து வட-கிழக்காக 76 கிமீ, திருவாரூரில் இருந்து வடக்காக 40 கிமீ, காரைக்காலில் இருந்து வட-மேற்காக 37 கிமீ அல்லது திருச்சிராப்பள்ளியிலிருந்து 125 கிமீ பயணம் செய்து அடைய வேண்டும். மேலும் ஒவ்வொரு நாளும் மயிலாடுதுறையிலிருந்து சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் மைசூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தென்னக இரயில்வேயின் முக்கியமான இரயில் நிலையங்களில் ஒன்றாக மயிலாடுதுறை சந்திப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் புவனேஸ்வர், சென்னை, கோயம்புத்தூர், காரைக்கால், மதுரை, மன்னார்குடி, இராமேஸ்வரம், மைசூர், திருச்சி, திருப்பதி, திருச்செந்தூர் மற்றும் வாரணாசி நகரங்களிலிருந்து இரயில்கள் மயிலாடுதுறைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. விமான வழியாக வந்து, பிறகு சாலை வழியாக பயணம் செய்வதை விட, ஒரே பயண வழியாக இரயில் வழியைத் தேர்ந்தெடுப்பது உண்மையில் உங்களுக்கான நல்ல வாய்ப்பு மட்டுமே.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மயிலாடுதுறைக்கு மிகவும் அருகிலுள்ள சர்வதேச விமான நிலையமாக சென்னை விமான நிலையம் உள்ளது. மயிலாடுதுறைக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் 271 கிமீ ஆகும். மிகவும் பரபரப்பான விமான நிலையமான சென்னையிலிருந்து வட இந்திய மற்றும் தென்னிந்திய நகரங்களுக்கு தொடர்ச்சியான விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை செல்வதற்கான டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் விமான நிலையத்திற்கு வெளியில் வந்த உடனேயே கிடைத்து விடும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed