Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மயிலாடுதுறை » வானிலை

மயிலாடுதுறை வானிலை

கோவில் நகரமாக இருந்தாலும் பல்வேறு வெளிப்புற விளையாட்டுகள், கேளிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் நகரமாக மயிலாடுதுறை உள்ளது. மிகவும் வெப்பமான காலமான கோடைக்காலம் இங்கு வருவதை தடுக்கும் பருவமாகும். எனவே, மகிழ்ச்சியான வெப்பநிலைகளையும், சூரிய உதயம் மற்றும் நிழலை தரும் குளிர்காலத்தை மயிலாடுதுறைக்கு சுற்றுலா செல்வதற்கான சிறந்த பருவமாக கொள்ளலாம். கோவில்களுக்கு செல்லும் பெரும்பாலன பக்தர்கள காலணிகளை அணியாமல் வெறும் காலுடனேயே செல்வதால் குளிர்காலம் அவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

கோடைகாலம்

தமிழ் நாட்டின் பிற பகுதிகளைப் போலவே மயிலாடுதுறையின் கோடைக்காலமும் மிகவும் வெப்பமானதாகவும், தாங்க முடியாததாகவும் இருக்கும். வழக்கமாக மயிலாடுதுறையின் வெப்பநிலை 25 டிகிரிக்கும்  43 டிகிரிக்கும் இடையில் இருக்கும். இரவில் சற்று ஈரப்பதமாக இருந்தாலும், நண்பகல் வேளைகள் தாங்க முடியாத வெப்பத்தை கொண்ட நாட்களாக இருக்கும். வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும் கோடை மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மயிலாடுதுறைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

மழைக்காலம்

மயிலாடுதுறை மக்களுக்கு, மழைக்காலம் வெப்பத்திலிருந்து அவர்களை விடுதலை செய்யும் காலமாகும். ஜுன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இம்மழைக்காலத்தில் அவ்வப்போது வரும் மழைச்சாறல்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. இந்நாட்களில் மயிலாடுதுறையின் பழமையான கோவில்கள் மழையால் பொலிவு பெற்றிருக்கும். மழைக்காலங்களில் எல்லா இடங்களும் சுத்தமானதாகவும் மற்றும் மிகவும் புத்துணர்வுடனும் இருக்கும்.

குளிர்காலம்

உண்மையில் டிசம்பர், ஜனவரி மாதங்களின் குளிர்காலம் சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடும் மாதங்களாகும். இந்நாட்களில் வெப்பநிலை 18 டிகிரி முதல் 32 டிகிரி வரையில் இருக்கும். குளிர்காலத்திலும் கூட மயிலாடுதுறையின் நண்பகல் வேளைகள் சற்று வெப்பமானதாகவே இருந்தாலும், கிழக்கு கடற்கரையையொட்டி உள்ளதால், பிற உள்நாட்டுப் பகுதிகளை விடவும் குளிர்ச்சியாகவே இருக்கும்.