Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மயிலாடுதுறை » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில்

ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை

15

காவிரி நதிக்கரையில் துலா மலையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில், 'தென்னிந்தியாவின் காசி' என்று புகழ் பெற்ற இடமாகும். விஸ்வநாத சுவாமி என்ற பெயர் எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் சிவமயத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது.

பல்வேறு காரணங்களால் வடநாட்டின் வாரணாசியில் உள்ள காசிக்கு செல்ல இயலாத புனிதப் பயணிகள், மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு வருவார்கள்.

காசிக்கு சென்று கங்கையில் மூழ்கி எழுவது செய்த பாவங்களையெல்லாம் துடைத்துவிடும் மற்றும் மோட்சத்திற்கு வழிகாட்டும் என்பது நம்பிக்கை! நாடு முழுவதுமுள்ள பக்தர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர ஆசைப்படும் ஒரே விஷயமாக காசி இருக்கிறது.

அதேபோல, இறந்தவர்களின் சாம்பலை காசியிலுள்ள கங்கை நதியில் கரைப்பது அவர்களுடைய ஆன்மா மறுவாழ்வில் மோட்சத்தை நோக்கி பயணிக்க உதவும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் சிவபெருமான் கங்கையில் கரைக்கப்பட்ட சாம்பலுக்குரியவரை சொர்க்கத்திற்கு செல்வதற்கான மந்திரத்தை உச்சரிப்பவர் என்பதும் திடநம்பிக்கையுள்ள பக்தர்களின் நம்பிக்கை!

காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவிலும் வாராணாசியில் உள்ள காசியைப் போலவே மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இக்கோவிலில் சிவபெருமானுடன், அவரது துணைவியார் பார்வதி தேவி, தொந்தி விநாயகர் மற்றும் பைரவர் ஆகியோர் உள்ளனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Jul,Sat
Check Out
12 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun