Search
 • Follow NativePlanet
Share

ஹாசன் – ஹொய்சள வம்சத்தின் பாரம்பரிய நகரம்

11

கிருஷ்ணப்ப நாயக் எனும் தளபதியால் 11ம் நூற்றான்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹாசன் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. உள்ளூர் குலதெய்வமான ஹாசனம்பா எனும் தெய்வத்தின் பெயரைக்கொண்டுள்ள இந்த நகரம் கர்நாடக மாநிலத்தின் கட்டிடக்கலைத் தலைநகரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த மாவட்டம் முழுவதுமே ஹொய்சளர் காலத்து உன்னதங்களையும் சின்னங்களையும் காண முடிகிறது என்பது குறிப்படத்தக்கது.

அக்காலத்திய ஹொய்சள சாம்ராஜ்யம் 11 – 14ம் நூற்றாண்டுகளில் துவார சமுத்ரத்தை தலைநகராக கொண்டு ஆளப்பட்டுள்ளது. அந்த நகரின் அடையாளங்களை இன்னமும் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹலேபீடு எனும் இடத்தில் பார்க்க முடிகிறது.

அப்போதைய ஹொய்சள ஆட்சியாளர்கள் ஜைனத்தை பின்பற்றிய போதிலும் பல சிவன் கோயில்களை அவர்கள் ஆட்சியில் கட்டியுள்ளனர் என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.

தன் வரலாற்று அடையாளங்களுக்காக பிரசித்தமாக அறியப்படும் இந்த ஹாசன் நகரம் பல துறைகளிலும் படு வேகமாக முன்னேறிவருகிறது.

இந்த நகரம் 26.5  ச.கி.மீ பரப்பளவில் அமைந்து 1,57,000 மக்கள் தொகையைக்கொண்டுள்ளது.

ஹாசன் நகரம் பற்றிய இதர தகவல்கள்

இந்த ஹாசன் நகரம் மலநாட் மற்றும் மைடான் பிரதேசத்தில் புவியியல் ரீதியாக அமைந்துள்ளது. ஆகவே இந்த மாவட்டம் முழுவதுமே அற்புதமான பருவநிலை காணப்படுகிறது. வெப்பமான காலை நேரம் மற்றும் குளுமையான குளிர்ச்சியான மாலை நேரத்தை ஹாசன் நகரம் பெற்றுள்ளது.

மாநிலத்தலைநகரமான பெங்களூரிலிருந்து 187 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் 79 % எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகையை கொண்டுள்ளது. மேலும் இது பெருமைமிக்க சில கல்வி நிறுவனங்களையும் பெற்றிருக்கிறது.

மலநாட் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங், ஷீ தர்மஸ்தலா காலேஜ் ஆஃப் ஆயுர்வேதா போன்றவை இவற்றும் குறிப்பிடத்தக்கவை ஆகும். இங்கு பிரதேச மொழி கன்னடமாக இருந்த போதிலும் ஆங்கிலமும் இந்தியும் அதிக அளவில் உபயோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான தொழிலாக விளங்கும் விவசாயம் இந்த பிரதேசத்தின்  பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது. இது தவிர மைசூர் மினரல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக குரோமைட் எனும் கனிமத்தாது தொழிலும் முக்கியமான ஒரு பொருளாதார அம்சமாக விளங்குகிறது.

மற்றும் ஒரு பெருமைமிக்க அம்சமாக இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் (ISRO) மையக்கட்டுப்பாட்டு கேந்திரமாக ஹாசன் நகரம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. சாலை, ரயில்  போன்ற  போக்குவரத்து மார்க்கங்களின் மூலமாக மாநிலத்தின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் எளிதில் சென்றடையும் வகையில் ஹாசன் நகரம் அமைந்துள்ளது.

அருகாமை விமானநிலையங்கள் மங்களூரில் 115 கி.மீ தூரத்திலும், பெங்களூரில் 187 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன. எனவே இந்த நகருக்கு விஜயம் செய்வது சுலபமாகவே உள்ளது.

ஹாசன் நகரத்தின் உள்ளும் புறமும் உள்ள சுற்றுலா அம்சங்கள் பற்றிய அறிமுகம்

பேலூர், ஹலேபீடு, சிரவணபெலகொலா மற்றும் கோரூர் அணை போன்றவை இங்குள்ள சில பிரசித்தமான சுற்றுலாத்தலங்களாகும். ஹாசன் நகரத்தில் பல வகையான உயர்தர தங்குமிடங்களும் மூன்று நட்சத்திர மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் மிகுந்திருப்பதால் பயணிகளுக்கு வசதிகுறைவு ஏதுமில்லை. கர்நாடக மாநிலத்தின் உன்னதமான வரலாற்றுப்பின்னணி மற்றும் பாரம்பரியம் போன்றவற்றை அறியும் ஆர்வம் உங்களுக்கு இருப்பின் கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை இந்த ஹாசன் நகருக்கு விஜயம் செய்துதான் ஆகவேண்டும். அதற்கு இப்போதிருந்தே திட்டமிடுங்கள்.

ஹாசன் சிறப்பு

ஹாசன் வானிலை

ஹாசன்
25oC / 76oF
 • Clear
 • Wind: SE 14 km/h

சிறந்த காலநிலை ஹாசன்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது ஹாசன்

 • சாலை வழியாக
  ஹாஸன் நகரம் நல்ல முறையில் அருகாமை நகரங்களுடன் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர், மைசூர், மங்களூர், மடிகேரி, சிக்மகளூர் போன்ற அருகாமை நகரங்களிலிருந்து ஹாஸன் நகருக்கு மாநில அரசுப் (KSRTC) பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  ஹாசன் நகரில் ரயில் நிலையம் உள்ளது. இது நகர மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அருகாமை நகரங்கள் மற்றும் பெங்களூர், மைசூர், மங்களூர் போன்ற முக்கிய பெருநகரங்களுடன் ரயில் சேவைகளை ஹாசன் ரயில் நிலையம் பெற்றுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் டாக்சிகள் மூலம் சுற்றுலாத்தலங்களை விஜயம் செய்யலாம்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  ஹாசன் நகரில் விமான நிலையம் இல்லை. இங்கிருந்து 117 கி.மீ தூரத்தில் உள்ள பெங்களூர் சர்வதேச விமான நிலையமே ஹாசனுக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கும் சர்வதேச நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Feb,Sun
Return On
25 Feb,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
24 Feb,Sun
Check Out
25 Feb,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
24 Feb,Sun
Return On
25 Feb,Mon
 • Today
  Hassan
  25 OC
  76 OF
  UV Index: 14
  Clear
 • Tomorrow
  Hassan
  21 OC
  70 OF
  UV Index: 14
  Sunny
 • Day After
  Hassan
  22 OC
  71 OF
  UV Index: 14
  Partly cloudy