Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹாசன் » வானிலை

ஹாசன் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள இடைப்பட்ட காலமே ஹாசனுக்கு விஜயம் செய்ய உகந்த காலமாக உள்ளது. பொதுவாக மழைக்காலம் மற்றும் கோடைக்காலம் இரண்டும் அதிக வெப்பம், மழை மற்றும் பயண அசௌகரியம் கருதி தவிர்க்கப்படுகின்றன.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): ஹாஸன்  மாவட்டம் கோடைக்காலத்தில் மிகுந்த வெப்பத்துடனும் உஷ்ணத்துடனும் காணப்படுகிறது. இக்காலத்தில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 35° C ஆகவும், இரவில் வெப்பநிலை 20° C ஆகவும் உள்ளது. அதிக உஷ்ணம் காணப்படும் ஏப்ரல் மாதத்தில் பயணிகள் இங்கு வருவதை தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை): மழைக்காலத்தில் கடுமையான மழைப்பொழிவை ஹாஸன்  பகுதி பெறுகிறது. ஊர் சுற்றிப்பார்ப்பது சிரமம் என்பதால் மழைக்காலத்தில்  ஹாஸனுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள பயணிகள் விரும்புவதில்லை.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): குளிர்காலத்தில் ஹாஸன்  நகரின் சிதோஷ்ண நிலை மிகக்குளிர்ச்சியுடனும் இனிமையான சூழலுடனும் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 24° C முதல் 31° C வரை உள்ளது. குளிர்காலத்தில் அதிக அளவில் பயணிகள் ஹாஸன்  நகரை முற்றுகை இடுகின்றனர்.