Search
  • Follow NativePlanet
Share

மைசூர் – பண்பாட்டுத் தலைநகரம்

175

கர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும். மைசூரின் புராதான அழகும் நன்கு பராமரிக்கப்பட்டிருக்கும் தோட்டங்களும் தொன்மை வாய்ந்த மாளிகைகளும், குளுமையான நிழற் சாலைகளும் இங்கு வருகை தரும் ஒவ்வொரு பயணியின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.

சந்தன மரத்தின் நறுமணமும், ரோஜா மலரின் வாசனையும் இன்ன பிற சுகந்தங்களுடம் எப்போதும் தவழும் மைசூர் நகரத்துக்கு சந்தனமர நகரம் என்ற பெயரும் உண்டு. தந்த நகரம் என்றும் அரண்மனை நகரம் என்றும் கூட இது உள்ளூர் மக்களால் பெருமையுடன் அழைக்கப்படுகிறது. யோகா கலைக்கு பிரபலமான மையமாக திகழும் மைசூர் யோகா நகரம் என்றும் கூட அழைக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் அஷ்டாங்க யோக பயிற்சிகள் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் கூட ஆர்வலர்களை அதிக அளவில் ஈர்க்கிறது.

புராணங்களும் ஐதீக கதைகளும்

தேவி பகவ புராணத்தின்படி ஆதி காலத்தில் மைசூர் நகரமானது மகிஷாசுரன் என்ற அசுர வம்ச மன்னனால் ஆளப்பட்டதாகவும் அவனது பெயரிலேயே மகிஷா – ஊரு என்ற பெயரில் அழைக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பெண் தெய்வமான சாமுண்டி இந்த மகிஷாசுரனை கொன்றழித்து இந்த நகரத்தின் காவல் தெய்வமாக மாறியதாக அந்த ஐதீக புராணம் மேலும் சொல்கிறது. சாமுண்டி தெய்வம் நகரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சாமுண்டி மலையில் கோயில் கொண்டுள்ளது. அப்படி மகிஷா-ஊரு என்று ஆதியில் அழைக்கப்பட்ட இந்த நகரம் பின்னாளில் மஹிஷூரு என்று மாறி அது இன்னும் சுருங்கி மைசூரு என்று கன்னடத்தில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த பெயர் ஆங்கிலேயர் காலத்தில் மைசூர் என்று இறுதிவடிவம் எடுத்துக்கொண்டது.

மைசூர் வரலாற்றிலிருந்து சில துளிகள்

அசோக மாமன்னரின் காலத்தில் மைசூர் புகழ் வாய்ந்த பகுதியாக விளங்கியதற்கு ஆதாரமாக கி.மு 245 ஆண்டிலேயே படைக்கப்பட்ட இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. இருப்பினும் மைசூர் பற்றிய வரலாற்றுபூர்வ ஆதாரங்கள் கி.பி 10 நூற்றாண்டிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.

வரலாற்று ஆதாரங்களின் படி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி 1004 ஆம் ஆண்டு வரை கங்க ராஜ வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. அதன்  பின்னர் நூறு ஆண்டுகளுக்கு சோழ ராஜ வம்சத்தினரின் ஆட்சி தொடர்ந்துள்ளது.

அதற்கடுத்ததாக சாளுக்கிய வம்சத்தினரின் ஆளுகையில் மைசூர் 10 ம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது. திரும்பவும் 10 ம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த சோழர்கள் 12ம் நூற்றாண்டில் ஹொய்சள வம்சத்தினரிடம் மைசூரை இழந்தனர். ஹொய்சளர்கள் மைசூரில் பல கோயில்களை கட்டியதுடன் மைசூரை இன்னமும் விரிவு படுத்தினர்.

கி.பி 1399 ஆம் ஆண்டிலிருந்து யது ராஜ வம்சத்தினர் விஜய நகர சாம்ராஜ்ய பிரதிநிதிகளாக மைசூரை ஆள ஆரம்பித்தனர். யாதவ வம்சத்தின் வழி வந்தவர்களாக கருதப்பட்ட யது ராஜ வம்சத்தினர்  பின்னர் காலப்போக்கில் உடையார் ராஜ வம்சம் என்று அழைக்கப்பட்டனர். பெட்டடா சாமராஜ உடையார் மைசூர் கோட்டையை புதுப்பித்து அதை தன் தலைமையகமாக வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் இவர் 1610 ஆம் ஆன்டு தன் அரசின் தலைநகரத்தை மைசூரிலிருந்து ஷீரங்கபட்டிணத்துக்கு மாற்றினார்.

1761ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டு வரை மைசூரை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆண்டனர். அதன் பின்னர் மைசூர் திரும்பவும் உடையார்களின் தலைநகரமாக மாறியது. 1895 ஆம் ஆண்டிலிருந்து 1940  வரை நான்காம் கிருஷ்ணராஜ வாடியார் தன் ஒப்பற்ற திட்டங்களின் மூலம் மைசூர் நகரத்தை அழகு மிகுந்த நகரமாக மாற்றினார்.  மைசூர் மாநகரம் அகலமான சாலைகளும், பூங்காங்களும், ஏரிகளும், கம்பீரமான மாளிகைகளும் கொண்ட அழகு நகரமாக இவர் காலத்தில் மாறியது.

மைசூரின் பண்பாட்டியல் அம்சங்கள்

மைசூருக்கு வருகை தரும் வெளியூர் பயணிகள் அனைவரும்  இந்த நகரத்தின் ஒவ்வொரு அம்சங்களிலும்  ஒரு பிரத்யேக பாரம்பரியமும் பண்பாடும் கலையம்சமும் மிளிர்வதை தவறாது உணர முடியும்.

கலை, கைவினைப்பொருட்கள், உணவு, வாழக்கை முறை போன்ற எல்லா அம்சங்களிலும் மைசூரின் ஒரு பிரத்யேக பண்பாட்டு அடையாளம் மிளிர்வதை காணலாம். அதே சமயம் மைசூர் மாநகரம் பல்வகைப்பட்ட மக்கள் வாழும் சர்வதேச வாழ்க்கை சூழலை கொண்டுள்ளது என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயம். பல்வகை பிரதேசங்களைச் சார்ந்த, பல்வகை மொழியை தாய்மொழியாக கொண்ட, பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

மைசூர் மாவட்ட்த்தின் தலைநகரமாக விளங்கும் மைசூர் நகரம் ஒரு சுற்றுலாப் பயணிக்கென்று பல்வேறு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. வரலாற்று பாரம்பரிய நினைவுச்சின்னங்கள், தொன்மை வாய்ந்த கோயில்கள், அருங்காட்சியகங்கள், ஏரிகள் மற்றும் தோட்டப் பூங்காக்கள் என பல எண்ணற்ற கவர்ச்சி அம்சங்கள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன.

அரண்மனை நகரம் என்று மிக பொருத்தமாக  அழைக்கப்படும் மைசூர் மாநகரத்தில் பல அரண்மனைகள் அமைந்துள்ளன. மைசூர் அரண்மனை அல்லது அம்பா அரண்மனை என்று அழைக்கப்படும் பெரிய அரண்மனையானது இந்தியாவிலேயே அதிகம் சுற்றுலாப் பயணிகளால் தரிசிக்கபடும் நினைவு சின்னமாகும்.

அது தவிர மைசூர் வனவிலங்கு காட்சியகம், சாமுண்டீஸ்வரி கோயில், மஹாபலேஸ்வரா கோயில், செயிண்ட் ஃபிலோமினா சர்ச், பிருந்தாவன் கார்டன், ஜகன்மோஹன் அரண்மனை ஓவியக்கூடம், லலித் மஹால் அரண்மனை, ஜயலட்சுமி விலாஸ் மாளிகை, ரயில்வே மியூசியம், கரன்ஜி ஏரி மற்றும் குக்கார ஹள்ளி போன்றவை மைசூரின் பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சங்களாகும்.

மைசூர் மாநகரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகிலுள்ள பல முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களுக்கும் தவறாமல் விஜயம் செய்கின்றனர். ஷீரங்கப்பட்டிணம், நஞ்சன்கூடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, தலக்காடு, மெல்கோட்டே, சோமநாதபுரா, ஹலேபேட், பேலூர், பண்டிபூர் தேசிய வனவிலங்கு பூங்கா, சிரவணபெளகொலா மற்றும் கூர்க்(குடகு) போன்ற முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள் மைசூர் மாநகருக்கருகில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

சாகசத்தை விரும்பும் மலை ஏறிகளுக்கு ராம் நகருக்கு அருகிலுள்ள மலைகள் அருமையான வாய்ப்பை தருகின்றன. இந்த இடம் மட்டுமில்லாமல் மைசூருக்கு அருகிலேயே சவண்துர்கா, கப்பல்துர்கா, தும்கூர் , துரஹள்ளி மற்றும் கனகபுரா போன்ற இடங்களிலும் மலை ஏற்றம் மேற்கொள்ள பொருத்தமான சூழல் உள்ளது. படாமி மற்றும் ஹம்பி போன்ற இடங்களில் உள்ள மலைப்பாறை அமைப்புகள் மைசூர் நகரத்துக்கு வருகை தரும் மலை ஏற்ற ஆர்வலர்களை பெரிதும் கவர்கின்றன.

பிலிகிரிரங்கணா மலை, சிக்மகளூர், ஹாஸன் மற்றும் குடகு போன்ற இடங்கள் நடைப்பயணம் மேற்கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு பொருத்தமான இடங்களாக விளங்குகின்றன. மைசூருக்கு வெளியே உள்ள காவேரி ஃபிஷிங் கேம்ப் என்ற இடத்தில்  தூண்டிலில் மீன் பிடித்து மகிழலாம். பறவைகளை கண்டு மகிழ்வதற்கு ஏற்றவாறு நாகர்கோல் ராஜீவ் காந்தி நேஷனல் பார்க், பி.ஆர் ஹில்ஸ் பறவைகள் சரணாலயம் மற்றும் ரங்கணாதிட்டு பறவைகள் சரணாலயம் போன்றவை மைசூரை நகரைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

மைசூர் நகரம் அங்கு கிடைக்கும் யானைத் தந்தத்தால் ஆன கைவினை பொருட்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அது தவிர அழகான பட்டு துணி வகைகள், சந்தன மரத்தில் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் மரத்தால் உருவாக்கப் பட்ட பலவகையான கலைப் பொருட்கள் என்று பல விசேஷப் பொருட்களுக்கு மைசூர் புகழ் பெற்றுள்ளது.

தசரா என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற மைசூர் திருவிழாவானது இங்கு பத்து நாட்களுக்கு தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. மைசூர் மக்கள் எல்லோருமே பெருமையுடன் கலந்து கொண்டாடும் இந்த திருவிழா காலத்தின் போது மைசூர் நகரம் விழாக்கோலம் பூண்டு வண்ணமயமாகவும் கோலாகலமாகவும் காட்சியளிக்கும். இக்காலத்தில் மைசூருக்கு வருகை தரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் தம் சொந்த கவலைகள் எல்லாம் மறந்து புத்துணர்ச்சியடைவதை நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

கடல் மட்டத்திலிருந்து 770 மீட்டர் உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் தெற்குப் பகுதியில் காவிரி மற்றும் கபினி ஆறுகளுக்கிடையில் அமைந்திருக்கும் மைசூர் மாநகரம் மிதமான பருவநிலையை யாத்ரீகர்களுக்கு வழங்குகிறது. மாநிலத் தலைநகரான பெங்களூரிலிருந்து 140 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மைசூர் நகரம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மண்டகள்ளி விமான நிலையம் என்று அழைக்கப்படும் மைசூர் விமான நிலையம் ஒரு உள் நாட்டு விமான நிலையமாக இயங்குகிறது. இங்கிருந்து முக்கிய இந்திய நகரங்களுக்கு தினமும் விமான சேவைகள் உள்ளன.

உயிரோட்டமான தெருக்களையும் சிறப்பான வரலாற்று பின்னணியையும் கொண்டுள்ள மைசூர் நகரம் உண்மையிலேயே கர்நாடக மாநிலத்தின் பண்பாட்டு தலை நகரம் என்று அழைக்கப்படுவதற்கு பொருத்தமான நகரமாகும்.

மைசூர் சிறப்பு

மைசூர் வானிலை

சிறந்த காலநிலை மைசூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மைசூர்

  • சாலை வழியாக
    மைசூருக்கு பெங்களூரிலிருந்து தொடர்ந்த பேருந்து சேவைகள் உள்ளன. கர்நாடக அரசு போக்குவரத்து பேருந்துகளையோ அல்லது தனியார் சொகுசு பேருந்துகளையோ பயணிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சொகுசு வால்வோ குளிர்பதன வசதி கொண்ட பேருந்துகளும், அதி வேக பேருந்துகளும் பெங்களூரிலிருந்து மைசூருக்கு கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மைசூர் ரயில் நிலையம் நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் இங்கிருந்து வாடகை கார் மூலம் நகரத்துக்குள் சுலபமாக வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மைசூர் விமான நிலையம் நகரின் மையப் பகுதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது உள் நாட்டு விமான நிலையம் என்பது குறிப்பிட த்தக்கது. இங்கிருந்து கோவா, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. மைசூரிலிருந்து 140 கி.மீ தூரத்திலுள்ள பெங்களூரில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed