ரொஸாரியோ தேவாலயம், மங்களூர்

போர்ச்சுகீசியர்களால் 1568ம் ஆண்டு கட்டப்பட்ட்து இந்த கிறித்துவ தேவாலயம். இங்கிருந்த பழைய தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு 1910ம் ஆண்டு ரோமானிய கட்டிடக்கலை முறைப்படி உருவாக்கப்பட்டது.

ஹெச். ஐ. புஸோனி எனும் பாதிரியாரால் இந்தப் புத்துருவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. மங்களூரின் ஹம்பன்கட்டா எனும் அமைதியான சந்தடியற்ற பகுதியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது.

ரொஸாரியோ மேனிலைப்பள்ளி என்ற பெயரில் பள்ளி ஒன்றும் இந்த தேவாலயத்தினால் நடத்தப்படுகிறது. வின்சென்ட் பால் மையம் என்ற பெயரின் சமூக சேவை மையம் ஒன்றும் இந்த தேவாலயத்தினால் நடத்தப்படுகிறது.

கடந்த காலத்தில் பல்விதமான அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் தாங்கி இந்த தேவாலயம் காலத்தில் நீடித்து நிற்கிறது. அன்னியரால் கட்டப்பட்டது இது என்பதால் திப்பு சுல்தானின் படையினரால் 1784ல் கொள்ளையடிக்கப் பட்டது.

ஆலய கோபுரத்தில் உச்சியில் உள்ள சிலுவையில் தினமும் பிரகாச விளக்கேற்றப் படுவதால் அது கடற்பயணிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும் திகழ்கிறது. ஆலய பீடத்தில் வைக்கப்பட்டுள்ள கன்னி மேரியின் உருவம் மீனவர்களால் கடலில் கண்டெடுக்கப்பட்டது எனும் நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது.

இப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகள் இந்த ஆலயத்தோடு தொடர்பு கொண்டிருப்பதால் இது பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகிறது.

Please Wait while comments are loading...