Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹொன்னேமரடு » ஈர்க்கும் இடங்கள் » கலசி

கலசி, ஹொன்னேமரடு

16

ஹொன்னேமரடு சுற்றுலாவின் போது விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு ஸ்தலம் இந்த கலசி எனும் நகரமாகும். இது இங்குள்ள இரண்டு சிவன் கோயில்களுக்கு புகழ் பெற்றுள்ளது. நீலகண்டேஸ்வரா கோயில் மற்றும் மல்லிகார்ஜுனா கோயில் என்பவை இந்த இரண்டு கோயில்களாகும்.

சாகரா நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள இது சோரப் சாலை வழியாக ஜோக் நீர்வீழ்ச்சியையும் இணைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களும் 12ம் நூற்றாண்டில் ஹொய்சள பாணியில் ஜங்கனா மற்றும் அவரது புதல்வரான தக்கனா என்பவர்களால் கட்டப்பட்டுள்ளன.இந்த இரண்டு கோயில்களில் பெரிய கோயிலான மல்லிகார்ஜுனா கோயிலில் கர்ப்பகிருகம். சுகநாசி, ரங்கமண்டபம் மற்றும் பசவமண்டபம் போன்றவை அமைந்துள்ளன.

மூன்று திசைகளில் அமைந்துள்ள மூன்று வாசல்கள் வழியாக பயணிகள் கோயிலுக்குள் நுழையலாம். நீலகண்டேஷ்வரா கோயிலிலிருந்து 30 அடி தூரத்திலேயே அமைந்துள்ள இந்த கோயிலும் ஒரு நட்சத்திர வடிவ மேடை அமைப்பின் மீது கட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோயிலின் கர்ப்பகிருகத்தில் ஒரு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் ஹொய்சள முத்திரையுடன் காணப்படும் புவனேஸ்வரி தேவி கோயிலையும் பயணிகள் பார்க்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Sep,Fri
Return On
12 Sep,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Sep,Fri
Check Out
12 Sep,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Sep,Fri
Return On
12 Sep,Sat