எல்லாபூர் – காடுகளும், அருவிகளுமாய்!

எல்லாபூர் ஒரு சிறிய ஊர்தான் என்றாலும் அதன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் அதை ஒரு சுற்றுலாத்தலமாக வெளி உலகிற்கு தெரியப்படுத்தியிருக்கிறது. அடர்ந்த காடுகளுக்கிடையே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை அணைந்தவாறு 1774 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஊர் எல்லாபூர். மலையிலிருந்து கீழே எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகளை நோக்கி பாயும் சொக்க வைக்கும் பல நீர்வீழ்ச்சிகளைக் கொண்டது.

பார்க்க மற்றும் அனுபவிக்க!

கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற  நீர்வீழ்ச்சியான சத்தோடி நீர்வீழ்ச்சி எல்லாபூர் அருகில் உள்ளது. அருவிக்கு செல்லும் பாதையின் அழகு பிரமிக்க வைக்கும் தன்மை கொண்டது.  மற்றும் ஒரு அழகான மகோட் நீர்வீழ்ச்சியும் எல்லாபூர் அருகில்தான் இருக்கிறது.

சுற்றிலும் காடுகள் சூழ அமைந்திருக்கும் எல்லாபூர் பல்வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்களை தன்னகத்தே கொண்டு பல்லுயிர் தன்மைக்கு உதாரணமாக விளங்கும் ஒரு ஊராகும். காட்டினூடே நடைப்பயணம் மேற்கொண்டால் பல்விதமான தாவர வகைகளையும், பறவைகளையும், விலங்குகளையும் பார்க்க முடியும்.

இக்காட்டுக்குள் கவி கேரே என்றழைக்கப்படும் குளம் ஒன்று இருக்கிறது. அதன் அமைதியும் நிசப்த அழகும் மனதை கொள்ளை கொள்ளக்கூடியது. எல்லாபூரிலிருந்து 30கி.மீ தொலைவில் கலச்சே என்ற கிராமத்தில் துர்கா தேவி கோயில் ஒன்றும் உள்ளது. இதுவும் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

எல்லாபூருக்கு அருகாமை ரயில் நிலையம் ஹூப்ளி. இங்கிருந்து பெங்களூரு, மங்களுர் மற்றும் சென்னைக்கு போக்குவரத்து வசதிகள் அதிகம். எல்லாபூரிலிருந்து ஹூப்ளி 71 கி.மீ தொலைவில் உள்ளது. இத்தூரத்தை டாக்ஸியில் கடக்கலாம்.

மழைக்காலத்தில் அருவிகளின் அருகில் செல்லமுடியாது என்பதால், நவம்பரிலிருந்து ஏப்ரல் வரையிலான காலம் எல்லாபூர் செல்வதற்கு உகந்தது.

Please Wait while comments are loading...