சந்திபூர் - சமுத்திரம் மறையும் இடம்!

சந்திபூர் என்ற கடற்கரை ரிசார்ட், ஒடிசாவில் உள்ள பாலேஷ்வர் மாவட்டத்தில், பாலேஷ்வர் இரயில் நிலையத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் கடல் ஒரு தனி வகையாக விளங்குகிறது. இங்கு இயற்கையின் விசித்திரமான விளையாட்டை நாம் காணலாம். அதாவது ஒரு சமயத்தில் திடீரென உள்வாங்கும் கடல் அடுத்த நொடியே உள்வாங்கிய அனைத்து இடங்களையும் மூடி விடும்.

புகழ் பெற்ற ஏவுகணை சோதனை ஏவும் தளம் இங்குள்ளது. அக்னி, ப்ரித்வி, ஆகாஷ் மற்றும் ஷௌர்யா போன்ற ஏவுகணைகள் இங்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை தளத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதியை பெற்றப்பின் இங்கு வரலாம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் சொகுசுக்காக கர்கரையை ஒட்டி பல தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது.

சந்திபூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

சந்திபூரை சுற்றி பல சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் அதற்கு இது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பாறைகள் நிறைந்த பசுமையான நீலகிரி குன்று, புனிதமான பஞ்சலிங்கேஷ்வர் மற்றும் ரெமுனாவில் உள்ள கிர்சோரா கோபிநாத் கோவில் ஆகியவைகள் தான் சந்திபூர் சுற்றுலாவின் முக்கிய ஈர்ப்புகள்.

சஜன்கர் என்ற தனிமை படுத்தப்பட்ட கிராமம், பிடர்கனிகாவில் உள்ள வனவிலங்கு சரணாலயம் போன்ற தலங்கள் சந்திபூரில் இருந்து தொலைவில் இருந்தாலும் இதனை விரும்பி இங்கும் பல சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.

சந்திபூரின் உணவு வகைகள்!

கடல் உணவுக்காக புகழ் பெற்றது சந்திபூர். நாக்கில் எச்சிலை ஊற வைக்கும் இறால் வகை உணவுகளை இங்குள்ள உணவகங்களில் சுற்றுலாப் பயணிகள் சுவைக்க தவறக்கூடாது. இது போக சுவை மிக்க சந்திபூர் இனிப்புகளையும் ஒரு கை பார்த்து விடுங்கள்.

சந்திபூரை அடைவது எப்படி?

பாலேஷ்வர் இரயில் நிலையம் மூலம் சந்திபூருக்கு இரயிலில் வரலாம். அங்கிருந்து டாக்சி, ஆட்டோ மூலம் சந்திபூரை வந்தடையலாம். சந்திபூரில் குளிர் காலத்தில் கடலையொட்டி குளிர்ந்த தென்றல் காற்று வீசுவதால் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதே சிறந்த நேரமாக இருக்கும்.

Please Wait while comments are loading...