கட்டாக் - வரலாற்றுப் பெருமை வாய்ந்த நகரம்!

ஒடிசாவின் தற்போதைய தலைநகரான புவனேஷ்வரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கட்டாக், ஒடிசாவின் பழைய தலைநகராகும். அபினாப கடக என இடைக்காலத்தில் வழங்கப்பட்ட பழமையான இந்நகரம் ஒடிசாவின் கலாச்சார மற்றும் வியாபார தலைநகராக கருதப்படுகிறது.

மகாநதி மற்றும் கத்ஜோரி நதிகளின் கரைகளில் அமைந்துள்ளபடியால் அழகுமிக்கதாக தோன்றும் இந்த சமவெளி நகரம் சுற்றுலாவிற்கு ஏற்றவாறு திகழ்கிறது. பழங்கால வரலாற்றை இங்கிருக்கும் நினைவுச்சின்னங்கள் மூலம் தெரிந்துகொள்ளமுடிந்த அதே சமயத்தில் நவீன வாழ்க்கை முறையையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

கட்டாக் அருலில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

யாத்ரீக ஸ்தலங்கள், மலைகள், கோட்டைகள், நினைவுச்சின்னங்கள் என ஏகப்பட்ட சுற்றுளா தளங்கள் இங்கு உள்ளன. அன்சுபா நன்னீர் ஏரி, தபாலேஷ்வர் கோவில், ரத்னகிரி, லலித்கிரி மற்றும் உதயநிதி மலைகள் போன்ற ரம்மியமான இடங்கள் இங்கு நிறைய உண்டு.

பங்கியில் உள்ள சர்சிகா கோவிலுக்கு நிறைய யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள். மா பட்டாரிக்கா என்ற கோவில், செளதார் என்னும் சிவன் கோவில், புத்தமதத்தைப் பற்றி அறிவிக்கும் நராஜ், சந்தி தேவி கோவில் என இங்கு ஏராளம் உண்டு.

சடாகோசியா வனவிலங்கு சரணாலயத்தில் பலவகை வனவிலங்குள் உள்ளன. பராபத்தி மைதானம் விளையாட்டு வீரர்களை ஈர்க்கிறது. விடுதலை போராட்ட தியாகிகளின் நினைவகமாக திகழும் நேதாஜி அருங்காட்சியத்தையும் தவறவிடக் கூடாது.

கட்டாக் - வண்ணமயமான சுற்றுலா!

இங்கு வாழ்க்கையைக் கொண்டாடும் மக்களும், வண்ணமயமான திருவிழாக்களும் கட்டாக் நகரை ரம்மியமாக்குகின்றன. வருடம் முழுதும் விழாக்களாலும், தசரா, கணேஷ் சதுர்த்தி, காளி பூஜா, வசந்த பஞ்சமி, ஈத், ஹோலி, கிறித்துமஸ், தீபாவளி போன்ற பண்டிகைகளாலும் கட்டாக் நகரின் கலாச்சார வாழ்க்கை நிரம்பி வழிகிறது.

ஆசியாவின் இரண்டாவது பெரிய திருவிழாவான பாலி யாத்திரை இங்கு நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பட்டம் திருவிழாவும் கலாச்சார கொண்டாட்டங்கலில் பங்கு பெறுகிறது. வியாபார சந்தையாகவும் திகழும் கட்டாக்கில் பட்டு, பருத்தி போன்ற துணிகளை வாங்கலாம்.  

Please Wait while comments are loading...