கியோஞ்சர் - நிறைவுகளின் நகரம்!

ஒடிசாவின் வடக்குப் பகுதியில் உள்ள நகராட்சியான கியோஞ்சர், அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். வடக்கே ஜார்கண்டும், தெற்கே ஜெய்பூர், மேற்கே தென்கனல் மற்றும் கிழக்கில் மயூர்பஞ்ச் நகரமும், எல்லைகளாக அமைந்துள்ளன.

இங்கு அமைந்திருக்கும் கியோஞ்சர் பீடபூமியில் பைதராணி நதி உருவாகிறது. மங்கனீசு தாது உற்பத்தியில் சிறந்த விளங்கும் இங்கு வருடம் முழுதும் பயணிகள் குவிகிறார்கள்.

அதுமட்டுமல்லாது பல வகையான பூக்கள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாகவும் இந்நகரம் திகழ்கிறது.  ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி வனத்தால் சூழப்பட்டுள்ள இம்மாவட்டத்தில் புலிகளும் ஏராளமாக தென்படுகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள ஜுயாங் மற்றும் புயான் பழங்குடிகள் இம்மாவட்டத்தின் பழம்பெருமையில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

கந்தஹார் நீர்வீழ்ச்சி, சங்ககரா நீர்வீழ்ச்சி, படா காகரா நீர்வீழ்ச்சி என இங்கே சுற்றுலாப்பயணிகளுக்கு பல வகையான தளங்கள் காத்திருக்கின்றன. கடகோனில் உள்ள கோவில், கோனாசிக, கண்டிஜகாய், பீம்குண்ட், முர்க்மஹாதேவ் கோவில் மற்றும் மாவட்ட அருங்காட்சியகத்திற்கு ஏராளமான பயணிகள் வருகை தருகிறார்கள். சக்ரதீர்த்தா என்ற பழமையான சிவன் கோவில் ஒன்றும் இங்கு உள்ளது.

யூத கோவில்கள், பழங்கால அரண்மனைகள் உள்ள ராஜாநகர், சிதா பின்ஜ் ஆகிய இடங்களும் இங்கு உள்ளன. அது மட்டுமல்லாது புலம்பெயர் பறவைகள் ஏராளமாக குளிர்காலத்தின் போது இங்கு வருகை தருகின்றன. ஒருகாலத்தில் புகழ்பெற்ற புத்த தளமாக விளங்கிய டியோகன் குஷலேஷ்வர் கோவிலும் இங்கு உள்ளது.

கியோஞ்சர் பயணிக்க சிறந்த பருவம்

பெரும்பாலான பயணிகள் நவம்பர் மாதத்தில் வானிலை மிதமாக நிலவுவதால் அப்போது பயணிப்பதையே விரும்புகிறார்கள்.

கியோஞ்சர் அடைய வழி

கியோஞ்சர் நகரை விமான, ரயில் மற்றும் சாலை வழி பயணங்களின் மூலம் சுலபமாக அடையலாம். பிஜூ பட்நாயக் விமான் நிலையமும், ஜேகே ரயில் நிலையமும் அருகிலேயே உள்ளன.

Please Wait while comments are loading...