Search
 • Follow NativePlanet
Share

சம்பல்பூர் - உருக வைக்கும் அனுபவங்கள்!

35

வரலாறும், புதுமையும் சங்கமாகும் இடம் சம்பல்பூர்! இன்று சம்பல்பூர் என்று அழைக்கப்படும் இடம் பல்வேறு ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்களால் பல முறை பிரிக்கப்பட்டதாகவும் மற்றும் இணைக்கப்பட்டதாகவும் உள்ளது. இங்கு ஆட்சி செய்து வந்த பல்வேறு அரசுகளின் கலாச்சார சின்னங்களை இங்கொன்றும், அங்கொன்றுமாக குவித்து வைத்து பல்வேறு வரலாற்று அனுபவங்களை காட்டும் இடமாக சம்பல்பூர் உள்ளது.

இன்றைய இந்தியாவின் மேற்கு கோளப்பகுதியில் உள்ள இம்மாவட்டம், கலாச்சார வளம் கொண்டதாகவும், அபரிமிதமான பசுமையான நிலப்பகுதிகளுடனும், இன்முகம் கொண்டு வரவேற்கும் மக்களை கொண்டதாகவும் உள்ளது.

சம்பல்பூர் - வைர வியாபார தலம் மற்றும் தாஜ்-இ-மாஹ்!

சம்பல்பூருக்கு சுற்றுலா வருவது ஒன்றும் புதிய விஷயமல்ல. பல நூற்றாண்டுகளாகவே சம்பல்பூர் நகரம் வைர வியாபார தலமாகவும், அதற்கான வியாபார வழிகளுக்காகவும் அறியப்பட்டு வந்திருக்கிறது.

பல்வேறு வைர சேகரிப்பாளர்களும், ஆர்வலர்களும் மகாநதியை சுற்றியுள்ள படுகைகளில் இருந்து கண்டெடுத்த வைரங்கள் இன்றளவில் அவற்றின் தெளிந்த அமைப்பிற்காக புகழ் பெற்றவையாகும்.

வண்ணமில்லாத 146 காரட் அளவிலான தாஜ்-இ-மா (நிலவின் கிரீடம்) சம்பல்பூரில் கண்டெடுக்கப்பட்டிருப்பது இங்கு கிடைக்கும் வைரங்களின் சுத்தத்தன்மைக்கு சான்றாக உள்ளது.

சம்பல்பூர் - கைத்தறிகளின் நகரம்!

பெண்களுக்கான பாரம்பரிய சேலை வகைகளில் ஒன்றான சம்பல்பூரி சோலைகள், இந்த பகுதியின் தனித்தன்மையான படைப்பாகும். கலைநயத்துடன் துணிகளில் நெய்யப்பட்டு, முடிச்சுகள் மற்றும் வண்ணங்கள் சேர்த்த இழைகளை ஒன்றாக சேர்த்து இவை நெய்யப்பட்டுள்ளன.

இவற்றின் சிக்கலான டிசைன்கள் மற்றும் அலங்காரங்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய விஷயங்களாகும். இதன் காரணமாகவே, இக்காட் அல்லது பந்தாகாலா சேலைகள் வரலாற்றிலும், கலைநயத்திலும் புகழ் பெற்று விளங்குகின்றன.

மேலும், சல்வார்கள், வேறு உடைகள் மற்றும் துண்டுகளிலும் கூட பந்தாகாலா துணிகளை நீடித்த உழைப்பிற்காக பயன்படுத்துவது வழக்கம். எனினும், நீங்கள் ஷாப்பிங் செல்லும் போது போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம்.

சம்பல்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சம்பல்பூர் சுற்றுலா பல்வேறு காரணங்களுக்காக சிறப்பாக நடந்து வருகிறது. ஹிராகுட் அணை, சமலேஸ்வரி கோவில், ஹீயுமாவின் சாயும் கோவில், சிபிலிமா நீர்; மின் சக்தி திட்டம், காந்தேஸ்வரி கோவில் மற்றும், மிகவும் முக்கியமாக மகாநதியும் சம்பல்பூர் சுற்றுலாவில் பெரும் பங்கு வகிக்கிறது.

டெபிகார் வனவிலங்குகள் சரணாலயம் இங்குள்ள முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். வறண்ட இலையுதிர் காடுகளை கொண்டிருக்கும் இந்த சரணாயலம் பல்வேறு வகையான தாவர மற்றும் விலங்கினங்களை கொண்டுள்ளது. கேட்டில் தீவு, உஷாகோதி, காந்தாரா, ஹடிபாரி மற்றும் விக்ரம்கோல் ஆகியவை சம்பல்பூரில் உள்ள பிற சுற்றுலா தலங்களாகும்.

சம்பல்பூரின் பருவநிலை

சம்பல்பூரின் பருவநிலை கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என்று பரவலாக பிரிக்கப்பட்டுள்ளது. சம்பல்பூரில் கோடைக்காலம் வெப்பமாகவும் மற்றும் குளிர்காலம் வேகமான காற்றுடனும்இருக்கும்.

சம்பல்பூரை அடையும் வழிகள்

தனித்தன்மையான காட்சிகள், ஒலிகள், சுவைகள் மற்றும் அனுபவங்களை கொண்டிருக்கும் சம்பல்பூர் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.

செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் சம்பல்பூருக்கு சுற்றுலா வர ஏற்ற மாதங்களாகும். சம்பல்பூர் நகரம் சாலை, இரயில் மற்றும் விமான வழிகளால் முறையாக இணைக்கப்பட்டுள்ளது.

சம்பல்பூர் சிறப்பு

சம்பல்பூர் வானிலை

சம்பல்பூர்
35oC / 94oF
 • Sunny
 • Wind: W 4 km/h

சிறந்த காலநிலை சம்பல்பூர்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது சம்பல்பூர்

 • சாலை வழியாக
  சம்பல்பூர் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் தரமான சாலைகள் போடப்பட்டுள்ளன. இந்நகரத்தின் அரசு போக்குவரத்து சிறப்பாக உள்ளது. ரூர்கேலா – சம்பல்பூர் நெடுஞ்சாலை, பெருகி வரும் போக்குவரத்தை சமாளிக்கும் பொருட்டாக 4 வழிப்பாதையிலிருந்து, 6 வழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. சம்பல்பூரின் பிற சாலைகளைப் போலவே, ஹிராகுட் செல்லும் பாதையும் கண்கவர் காட்சிகளைக் கொண்டிருக்கும்.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  கேட்ராஜ்பூர், ஃபாடாக், ஹிராகுட் மற்றும் சம்பல்பூர் ஆகிய நான்கு இரயில் நிலையங்கள் உள்ள இரயில் நகரமாக சம்பல்பூர் உள்ளது. சம்பல்பூர் இரயில் நிலையம் புவனேஸ்வர் - ஜார்சுகுடா இரயில்வே லைனிலும், பிற இரயில் நிலையங்கள் ஜார்சுகுடா – பார்கார் இரயில்வே லைனிலும் உள்ளன. பெரும்பாலான இரயில் நிலையங்களுடனும் இந்த இரயில் நிலையங்கள் தொடர்பில் இருந்தாலும், கௌகாத்தி, லக்னோ, டேராடூன் மற்றும் இந்தூர் ஆகிய இரயில் நிலையங்கள் தொடர்பில் இல்லை.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  வட இந்தியா மட்டுமல்லாமல் நாட்டின் பிற பாகங்களுடனும் சம்பல்பூர் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. 325 கிமீ தொலைவில் உள்ள பிஜீ பட்நாயக் விமான நிலையம் மற்றும் 262 கிமீ தொலைவில் இருக்கும் சுவாமி விவேகானந்தா விமான நிலையம் ஆகியவை அருகிலுள்ள விமான நிலையங்களாகும். சம்பல்பூருக்கு வெளியில், 50 கிமீ தொலைவிலேயே கட்டப்பட்டு வரும் ஜார்சுகுடா, ஒரிஸா விமான நிலையம் மிகவும் அருகிலுள்ள விமான நிலையமான வரவிருக்கிறது.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Oct,Thu
Return On
30 Oct,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
29 Oct,Thu
Check Out
30 Oct,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
29 Oct,Thu
Return On
30 Oct,Fri
 • Today
  Sambalpur
  35 OC
  94 OF
  UV Index: 9
  Sunny
 • Tomorrow
  Sambalpur
  29 OC
  84 OF
  UV Index: 9
  Sunny
 • Day After
  Sambalpur
  30 OC
  86 OF
  UV Index: 9
  Partly cloudy