உதயகிரி – புத்த மத யாத்திரை பூமி!

உதயகிரி, இந்தியாவின் தலைசிறந்த கட்டுமான அற்புதத்துக்கு மிகப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டாகும். மிகச் சரியாக சொல்வதானால், இது ‘இயற்கையான பேருவகை மற்றும் மனிதக் கட்டிடக்கலை ஆகியவற்றின் அரிய கலவையாக’ விளங்குகிறது. புத்த விகாரங்கள், ஸ்தூபிகள் மற்றும் அகழ்வாராய்ந்து எடுக்கப்பட்ட ஜெயின் கட்டுமான சிதிலங்கள் போன்றவற்றை உள்ளிடக்கிய இந்த இடம் கட்டுமானம் மற்றும் சரித்திர ரீதியில் அபரிமிதமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

புபனேஷ்வரிலிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்து, ‘சூரியோதய மலைகள்’ என்று பொதுவாக அழைக்கப்படும் உதயகிரி, இங்குள்ள 18 குகைகளுள் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் மற்றும் குறிப்புகளினால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தன்னகத்தே ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.

காரவேலா ஆட்சிக்காலத்தின் போது ஜெயின் மத பிக்ஷுக்கள் தங்குவதற்காக மலைகளிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட பாறைகளைக் கொண்டு இந்த குகைகள் உருவாக்கப்பட்டதாக இங்குள்ள பல்வேறு குறிப்புகளும் உரைக்கின்றன.

உதயகிரி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

உதயகிரியில் காணப்படும் 18 குகைகளும் மொத்தமாக உதயகிரி குகைகள் என்று அழைக்கப்படுகின்றன. உதயகிரிக்கு அடுத்தாற் போல் இருக்கும் மலையான கந்தகிரி, சுமார் 15 குகைகளைக் கொண்டுள்ளது.

உதயகிரி மற்றும் கந்தகிரி ஆகிய இரண்டுமே உதயகிரி சுற்றுலாத்துறையின் பெருமைமிகு பீடங்களாக விளங்குகின்றன. இவ்விரு மலைகளோடு, லாங்குடி மலை, லலித்கிரி மற்றும் ரத்னகிரி ஆகியவையும் பிரசித்தி பெற்ற புத்த மத ஸ்தலங்களாகத் திகழ்கின்றன.

இவற்றுள் லலித்கிரி, கௌதம புத்தரின் நினைவுச் சின்னங்களைக் கொண்டிருக்கும் பெருமை வாய்ந்ததாகும். இந்த வசீகரமான ஸ்தலங்கள் உதயகிரி சுற்றுலாத்துறையின் பணவரவு மற்றும் உயர்ந்த அந்தஸ்த்துக்கு கட்டியம் கூறுவனவாக உள்ளன.

உதயகிரி வானிலை

உதயகிரியின் வானிலை கோடைகாலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என்று மூன்று பருவங்களாகப் பிரிக்கப்படுகிறது. கோடைகாலம் வழக்கமாக வெப்பமாகவும், புழுக்கத்துடனும் காணப்படும்; ஆனால் குளிர்காலமோ உறைய வைக்கும் குளிருடன் இருக்கும்.

உதயகிரியை எவ்வாறு அடையலாம்?

உதயகிரி, ஒடிஷாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு பாரம்பரிய ஸ்தலமாகும். அதனால் இந்த இடத்தை தொடர்பு கொள்வது ஒரு பிரச்சினையே அல்ல.

உதயகிரி, புவனேஷ்வருக்கு வெகு அருகில் அமைந்துள்ளதனால் சுற்றுலாப் பயணிகள் வான், இரயில் அல்லது சாலை வழி போக்குவரத்து சேவைகள் மூலம் பயணம் செய்து எளிதாக இங்கு வந்தடையலாம்.

கட்டாக் இரயில் நிலையமே இதற்கு அருகாமையில் அமைந்துள்ளது. உதய்கிரியின் வானிலை குளுமையாகவும், ரசிக்கத்தக்கதாகவும் இருக்கக்கூடிய அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தின் போது உதயகிரி சுற்றுலாத்துறை, அதிகமான பயணிகளின் வருகையைக் காண்கிறது.

Please Wait while comments are loading...