Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதயகிரி » ஈர்க்கும் இடங்கள் » புத்த மத வளாகம்

புத்த மத வளாகம், உதயகிரி

20

ஒடிஷாவிலுள்ள புத்த மத வளாகம் லலித்கிரி, ரத்னகிரி, உதயகிரி மற்றும் தௌலிகிரி ஆகிய மலைகளில் அமைந்துள்ளது. இவற்றுள், உதயகிரியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள தௌலிகிரியில் அமைந்துள்ள ஒரு வளாகம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தௌலிகிரியில் தான் கலிங்கா போர் நடைபெற்றதாகவும், பேரரசர் அசோகர் ஏகாதிபத்தியத்தைத் துரத்துவதை விடுத்து, வாழ்வின் உண்மையான அர்த்தத்தைக் கண்டறியும் பொருட்டு புத்த மதத்தைத் தழுவினார் என்றும் நம்பப்படுகிறது.

இங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்ட பல்வேறு குறிப்புகள், பாறை மேல் இயற்றப்பட்டுள்ள சாசனங்கள், ஸ்தூபிகள் மற்றும் புத்தரின் சிலைகள் போன்றவை அசோகர் புத்த மதத்தின் பால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்ததற்கான சான்றாகத் திகழ்கின்றன.

ஏராளமான சையித்யாக்கள் மற்றும் தூண்களும் இங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. 1970 ஆம் ஆண்டில் மலையின் மேல் கட்டப்பட்டுள்ள ‘ஷாந்தி ஸ்தூபி’ என்ற வெள்ளை நிற கோபுரம், தற்சமயம் வருடா வருடம் இவ்விடத்திற்கு திரளாக வரும் புத்த யாத்ரீகர்கள் தங்கும் இடமாக செயல்பட்டு வருகிறது.

ஏராளமான புத்தர் சிலைகள் இந்த ஸ்தூபியினுள் கட்டப்பட்டிருக்கும் அழகைக் காண்பதற்காகவே இங்கு சென்று வரலாம். மலையுச்சியில் சிவன் கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி மிகவும் கோலாகலமாக, விமரிசையான முறையில் கொண்டாடப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed