Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதயகிரி » ஈர்க்கும் இடங்கள் » உதயகிரி குகைகள்

உதயகிரி குகைகள், உதயகிரி

20

உதயகிரி குகைகள், புவனேஷ்வர் மற்றும் கட்டாக் மாவட்டத்துக்கு அருகாமையில் உள்ள இயற்கை அழகு கொஞ்சும் மலைகளில் அமைந்துள்ளன. உதயகிரி, மொத்தமாக 18 குகைகளைப் பெற்றுள்ளது.

இவை அனைத்தும் இந்தியாவின் தொல்பொருளியல் சர்வேயின் கீழ் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன. பழங்கால கட்டிடக்கலையின் தனித்துவம் வாய்ந்த தலைசிறந்த படைப்பாகத் திகழும் இக்குகைகள் காரவேலா ஆட்சிக்காலத்தின் போது ஜெயின் மத பிக்ஷுக்கள் தங்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவையாகும்.

2 ஆம் நூற்றாண்டு பிசியைச் சேர்ந்த உதயகிரி குகைகள், நேர்த்தியாக செதுக்கப்பட்டு மிகுந்த ஒளிர்வுடன் காணப்படுவதனால் இக்குகைகள் புத்த மதத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன.

புத்த விகாரங்கள் மற்றும் ஸ்தூபிகளின் தொகுப்பு, சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு புத்த மதத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வருகை புரிகின்றனர்.

இக்குகைகளுள் ராணிகும்பா, ஹதிகும்பா மற்றும் கணேசகும்பா ஆகியவை அதிகமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட குறிப்புகள் காரவேலா ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த பல்வேறு வரலாற்று உண்மைகளை விளக்குவதாக உள்ளன.

இதர குகைகளிலும் அழகிய சிற்பங்களைக் காண முடிகிறது. உதயகிரி குகைகளுக்கு அருகில் அமைந்துள்ள கந்தகிரி குகைகள் இவ்விடத்துக்கு வருகை தருவதை மேலும் அர்த்தமுள்ளதாக்குகின்றன. இந்த குகைகள் பார்வையாளர்கள் சென்று பார்க்கும் வண்ணம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் திறந்து வைக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed