Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதயகிரி » ஈர்க்கும் இடங்கள் » கந்தகிரி குகைகள்

கந்தகிரி குகைகள், உதயகிரி

20

கந்தகிரி குகைகள், உதயகிரி குகைகளுக்கு பக்கவாட்டில் சுமார் 15 முதல் 20 மீட்டர் வரையிலான சுற்றளவில் காணப்படுகின்றன. இக்குகைகளை அடைய படிக்கட்டுகள் வழியாகச் செல்ல வேண்டும்.

இக்குகைகள் காண்போரை பெருமைமிக்கதான கடந்து போன யுகத்துக்கே அழைத்துச் செல்லக்கூடிய உணர்வளிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தவையாகும்.

இது ஜெயின் பிக்ஷுக்கள் தங்கும் வண்ணம் கட்டப்பட்ட மொத்தம் 15 குகைகளை உள்ளடக்கியுள்ளது. சுமார் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த இக்குகைகள், ஏராளமான குறிப்புகள் மற்றும் சிற்பங்களை தம் சுவர்களில் கொண்டு காட்சியளிக்கின்றன.

பாறைகளில் தீட்டப்பட்டு வெட்டியெடுக்கப்பட்ட பல்வேறு ஓவியங்கள் மற்றும் கலைநயம் கொண்ட பூவணி வேலைகள் ஆகியவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ள இக்குகைகள் இங்கு வருவோரை எளிதாகக் கவர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இந்த கம்பீரமான மலையின் உச்சியில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெயின் கோயில் ஒன்றும் காணப்படுகிறது. இக்கோயில் அழகிய செதுக்கல்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டு எழிலுற காட்சியளிக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாத இறுதியில், இந்து மத பெருங்காப்பிய வரிகளை பாராயணம் செய்வதற்காகவும், தியானத்தில் ஈடுபடுவதற்காகவும் ஏராளமான துறவிகள் இங்கு வந்து குழுமுகின்றனர். இச்சமயத்தில் இங்கு நடைபெறும் கண்காட்சி ஒன்றும் பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu