பெர்ஹாம்பூர் - பிரம்மனின் இருப்பிடம்!

பெர்ஹாம்பூர் என்ற ஆங்கிலேயர்கள் இட்ட பெயர் சமீபத்தில் அவ்வூரின் சமஸ்கிருத தொடர்புக்கு ஏற்ப பிரம்மாபூர் என மாற்றப்பட்டது. எனினும் இன்னமும் பலர் பெஹ்ராம்பூர் என்றே அழைக்கிறார்கள். இங்கிருக்கும் ஏராளமான கோவில்கள் உள்ளூர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது யாத்ரீக சுற்றுலாவின் மூலம் வருமானம் மாநில அரசின் வருமானத்தில் பெரும்பங்கு வகிக்கிறது,

பெர்ஹாம்பூர் - பட்டு நகரம்!

ஒடிசாவின் பழம்பெரும் நகரங்களுள் ஒன்றான பெர்ஹாம்பூர் பட்டு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரின் பாரம்பரியமும், வரலாற்றுப் பெருமையும் பெர்ஹாம்பூர் சமகாலத்தில் பெரும் பெருமைக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

இங்கு தயாராகும் உயர்ரக பட்டு பெர்ஹாம்பூர் பட்டா என்றழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது கைத்தறித் துணிகள் மற்றும் ஆபரணங்களும் இங்கு ஏராளமாக கிடைக்கின்றன.

எது மாதிரியும் இல்லாத தனித்துவம் வாய்ந்த கடற்கரை!!

கடற்கரை விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக பெர்ஹாம்பூர் திகழ்கிறது. வழமையான மணல், சூரியன், சறுக்கு விளையாட்டுக்கள் மட்டுமல்லாது கோவில்கள், உணவுவகைகள், அரங்கங்கள் என பெர்ஹாம்பூரின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் இங்கு பொழுதுபோக்க ஏராளமான விசயங்கள் உண்டு.

பெர்ஹாம்பூர் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

பெர்ஹாம்பூர் சுற்றுலாத்துறை நகரில் நிலவும் பலவகையான இயற்கை சத்தங்களுக்காகவும், காட்சிகளுக்காகவும் வளம் கொழிக்கும் துறையாக இருக்கிறது.

இங்கிருக்கும் பங்கேஸ்வரி கோவில், நாராயணி, மஹேந்திரகிரி, மா புதி தாகுரணி கோவில், பால்குமாரி கோவில், மந்திரிதி சித்த பைரவி கோவில் ஆகியவை இங்கிருக்கும் புகழ்பெற்ற கோவில்களாகும்.

தப்தபானி வெந்நீர் ஊற்றில் பயணிகள் நீராடி மகிழலாம். அதுமட்டுமல்லாது 30கிமீ தொலைவில் உள்ள ஆர்யபள்ளி கடற்கரையிலும் மிதமான வெப்பக் காற்றை அனுபவித்து மகிழலாம்.

பயணிக்க சிறந்த பருவம்

அக்டோபர் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் மிதமான வானிலை நிலவுவதால் பயணிக்க சிறந்த பருவமாக அறியப்படுகின்றன.

பெஹ்ராம்பூர் அடைய வழிகள்

நாட்டின் பல முக்கியமான நகரங்கள் பெஹ்ராம்பூருடன் சாலை, ரயில், விமான தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளதால் பயணிப்பது சுலபம்.

Please Wait while comments are loading...