பட்டாரிக்கா, கட்டாக்

கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த படம்பா நகரின் சசாங்கா கிராமத்தில் உள்ள பட்டாரிக்கா கோவில் இந்துக்களின் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும். மா பட்டாரிக்கா என்ற அம்மனை பிரதான தெய்வமாக கொண்டுள்ள இந்தக் கோவில் சக்தி வடிவமாக பூஜிக்கப்படுகிறது.

ரத்னகிரி மலைகளின் அடிவாரத்தில் உள்ள இக்கோவில் இயற்கை காட்சிகளுக்காகவும், கம்பீரத்திற்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. துர்கை அம்மன் இங்கு தோன்றி பரசுராமனை ஆசீர்வதித்ததாக நம்பப்படுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு குவிகிறார்கள்.

Please Wait while comments are loading...