லலித்கிரி, கட்டாக்

கட்டாக்கில் இருந்து 62 கிமீ தொலைவில் உள்ள இவ்விடம் புத்தமதத்தினரின் யாத்ரீக தளமாக திகழ்கிறது. அருமையான புத்தக் கோவில் ஒருகாலத்தில் இங்கு இருந்ததாக நம்பப்படுகிறது. 

அக்கோவிலின் மிச்சங்களை இன்றும் காணலாம். ரத்னகிரி மற்றும் உதய்கிரி, லலித்கிரி ஆகிய மலைகள் முக்கோண்ட வடிவத்தை உருவாக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

பச்சைப் பசேலென்ற சூழ்ந்திருக்கும் இவ்விடத்தில் உள்ள ஏராளமான தூண்களும், புடைப்புச்சிற்பங்களும் நம்மை புராண  காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன.  

மகாவீரரின் சிலை ஒன்றும் புஷ்பகிரி மலை மீது அமைந்துள்ளது. புத்த கட்டிடக்கலையின் சிறப்பம்சமாக இந்த தூண் கருதப்படுகிறது. லலித்கிரியில் உள்ள அருங்காட்சியகம் ஏராளமான பழங்கால மிச்சங்களை பார்வைக்கு வைத்துள்ளது.

Please Wait while comments are loading...