Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சந்திபூர் » வானிலை

சந்திபூர் வானிலை

சந்திபூருக்கு சுற்றுலா வருவதற்கு குளிர் காலமே சிறந்தது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. குளிர் காலத்தின் போது இங்கு மணல் திருவிழா கொண்டாடப்படும். இத்திருவிழாவின் போது கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடைகளின் பொருட்காட்சிகள் பெரிய அளவில் நடத்தப்படும். புகழ் பெற்ற கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளும் நடந்தேறும். இந்நேரத்தில் இங்கு சுற்றுலாவிற்கு சென்றால் கதகதப்பான ஆடைகளை எடுத்துச் செல்லுங்கள்.

கோடைகாலம்

சந்திபூரில் மார்ச் மாதம் ஆரம்பிக்கும் கோடைக்காலம் ஹுனே மாதம் இறுதி வரை நீடிக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை வெளுத்து வாங்கும். பகல் முழுவதும் அனல் காற்று வீசுவதால் இந்நேரத்தில் இங்கு இருப்பது கடினமாக இருக்கும். அதனால் டீஹைட்ரேஷன் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகளை மக்கள் அடிக்கடி சந்திக்க நேரிடும்.

மழைக்காலம்

வெயிலின் சீற்றத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் மழைக்காலம் ஜூலை மாதம் தொடங்கும். செப்டம்பர் வரை ஒட்டு மொத்த மாவட்டத்திலும் கன மழை பெய்யக்கூடும். மழை தீவிரம் அடையும் போது நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். அதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடுகளாக மாறிவிடும். ஒரு கட்டத்தில் தொலை தொடர்புகளும் பாதிக்கப்படும்.

குளிர்காலம்

குளிர் காலம் இங்கு இனிமையாக விளங்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் வரை குறையும். அக்டோபர் மாதம் தொடங்கும் குளிர் காலம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். இந்நேரத்தில் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த தென்றல் வீசிக்கொண்டே இருப்பதோடு வானிலை ரம்மியமாக இருக்கும்.