கோல்வா பீச் - இயற்கை சித்திரம்!

தெற்கு கோவாவில் அமைந்திருக்கும் கோல்வா பீச், வடக்கு கோவாவில் உள்ள மற்ற கடற்கரைகளை போல அல்லாமல் மிகவும் அமைதியானது. அதுமட்டுமல்லாமல் 24 கிலோமீட்டர் நீளம் பறந்து விரிந்து கிடக்கும் இந்தக் கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்று.

மேலும் ஒருபுறம் தெற்கு கோவா கேளிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் இங்குள்ள ஒரு சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நம்பிக்கை அளிக்கும் விதமாகவே உள்ளது. அதோடு புகழ்பெற்ற கோல்வா தேவாலயத்துக்கு அக்டோபர் மாதத்திற்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

கோல்வா பீச்சுக்கு வெகு அருகிலேயே போர்த்துகீசிய கபோ டி ராமா கோட்டை இருக்கிறது. அதோடு நகரின் மத்தியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், மார்காவ்ன் ரயில் நிலையத்திற்கு வெகு அருகிலும் இருப்பதால் கோல்வா பீச்சை அடைவது மிகவும் சுலபம்.

Please Wait while comments are loading...