Search
  • Follow NativePlanet
Share

பேர்நெம் - அமைதியும், பேரழகும்!

11

மகாராஷ்டிரா மற்றும் கோவா எல்லையில் அமைந்திருக்கும் பேர்நெம் நகரம் அமைதியும், பேரழகும் வாய்ந்த கடற்கரைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் சப்போரா மற்றும் திராகோல் நதிகளில் நாட்பூராவும் மீன்பிடித்து உங்கள் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். அதுமட்டுமில்லாமல் பல ஆண்டுகளுக்கு முந்தைய கோவாவின் தோற்றத்தை நீங்கள் காண விரும்பினால்  பேர்நெம் நகருக்குத்தான் வர வேண்டும்.

மும்பை மற்றும் புனேவில் வசிக்கும் மக்களுக்கு பேர்நெம் நகரம் பல ஆண்டுகளாக விருப்பமான விடுமுறை காலஸ்தலமாக இருந்து வருகிறது. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஸ்ரீ பகவதி கோயில் மற்றும் தேஷ்பிரபு இல்லம் ஆகிய இடங்களுக்கும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.

இதில் தேஷ்பிரபு இல்லம் எனும் மிகப்பெரிய மாளிகையில் வசித்த தேஷ்பிரபு என்பவர்தான் உலகிலேயே பிரபுப்பட்டம் பெற்ற ஒரே ஹிந்து ஆவார். இந்தப் பிரபுப் பட்டம் என்பது ஐரோப்பாவை பொறுத்த வரை மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. இதுதவிர பகவதி கோயிலில் காணப்படும் யானைகளின் நினைவுச் சின்னங்கள் பயணிகளிடையே மிகப்பிரபலம்.

கோவாவை வடதிசையிலிருந்து அடைவீர்களானால் நீங்கள் முதலில் வந்து சேரும் இடம் பேர்நெம்மாகத்தான் இருக்கும். இந்த பேர்நெம் நகரம் கோவா தலைநகர் பனாஜியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

எனவே பனாஜியிலிருந்து,  பேர்நெம் நகரை வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். மேலும் வானிலை அனுமதித்தால் பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கூட பேர்நெம் நகருக்கு பயணிக்கலாம்.

பேர்நெம் சிறப்பு

பேர்நெம் வானிலை

சிறந்த காலநிலை பேர்நெம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பேர்நெம்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon